
புனே அணி
ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் சரியாக விளையாடவில்லை. அந்த அணியில் பல வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அதற்கு முன்பும் கூட அணியில் உயிரோட்டம் இல்லை.

டோணி
டோணி தலைமையிலான அணியில் உள்ளவர்களிடம் ஒரு உற்சாகம் இருக்கும். ஆனால் புனே அணியிடம் அந்த உற்சாகம் இல்லை. டோணி பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல் உள்ளார்.

பேட்டிங்
இக்கட்டான நிலைகளிலும் கூட அதிரடியாக பேட்டிங் செய்து அணியை காப்பாற்றுவதற்கு பெயர் போனவர் டோணி. ஆனால் தற்போது பேட்டிங்கில் அவர் சோபிக்கவில்லை. அணியின் பேட்டிங் மேம்படவும் அவர் எதுவும் செய்யவில்லை.

கேப்டன்
முக்கியமான நேரங்களில் டோணி முன்கூட்டியே பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்திருந்தால் புனே அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும்.

இர்பான் பதான்
டோணி இர்பான் பதானுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இர்பான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தபோது அவரை மைதானத்தில் பார்க்க முடியவில்லை. தற்போதும் அவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











