For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே ஐடியா கேட்க வரமாட்டேன்கிறாங்க... கபிலோடு பண்டியாவை கம்பேர் பண்ணாதீங்க.. கவாஸ்கர் கடுகடு

By Aravinthan R

டெல்லி : முதல் டெஸ்ட் போட்டி குறித்து கவாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது கருத்துக்களை கூறி வருகிறார். நேற்று, இந்திய அணி சரியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை என கூறிய அவர், இன்றும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் முக்கியமாக, கபில் தேவோடு, இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பண்டியாவை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என தெரிவித்துள்ளார். தவானின் மோசமான பேட்டிங் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.

gavaskar is not amused with the comparsions between kapil dev and pandya



ஆஜ் தக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவாஸ்கர், “கபில் தேவை யாரோடும் ஒப்பிடக் கூடாது. அவர் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை உதித்த வீரர் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை உதித்த வீரர். சர் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைப் போல” என்றார்.

ஷிகர் தவானின் டெஸ்ட் போட்டி அணுகுமுறை குறித்து கூறினார். “ஷிகர் அவரது ஆட்டத்தை மாற்ற விரும்பவில்லை. அவர் தனக்கு வெற்றிகளை தேடித்தந்த ஷாட்களையே ஆட விரும்புகிறார். அது போன்ற ஷாட்கள் ஒருநாள் போட்டிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். அங்கே ஸ்லிப் பீல்டர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். எட்ஜ் ஆகும் பந்து ஸ்லிப் திசையில் பவுண்டரியை அடையும். ஆனால், டெஸ்டில் அது போன்ற ஷாட்கள் அடித்தால் விக்கெட் தான் பறிபோகும். மனதளவில் ஒரு வீரர் தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் தடுமாறிக் கொண்டே தான் இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பல யோசனைகளை தெரிவித்தார் கவாஸ்கர். லார்ட்ஸ் டெஸ்டில் புஜாரவை சேர்க்க வேண்டும் என கூறினார். புஜாரா டெஸ்ட் போட்டிகளுக்கு உரிய நுட்பமும், பொறுமையும் உடைய வீரர், உமேஷ் யாதவுக்கு பதில் இவரை தேர்ந்தெடுக்கலாம் என கூறினார்.

அதே போல, டாஸ் வென்றால் யோசிக்காமல் பேட்டிங் எடுக்க வேண்டும். சமீப காலங்களில் இரண்டாவதாக ஆடும் அணி கடைசி இன்னிங்க்ஸில் 200 ரன்களை கூட எடுக்க தடுமாறி வருகிறது என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முன்பு சச்சின், டிராவிட், சேவாக், லக்ஷ்மன் உள்ளிட்ட வீரர்கள் என்னிடம் அடிக்கடி யோசனைகள் கேட்பார்கள். ஆனால், இந்த தலைமுறை வித்தியாசமானதாக இருக்கிறது. நிறைய பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள், பேட்டிங் பயிற்சியாளர் கூட இருக்கிறார். ரஹானே மட்டும் எப்போதாவது என்னிடம் பேசுவார் என கூறினார்.





Story first published: Thursday, August 9, 2018, 10:55 [IST]
Other articles published on Aug 9, 2018
English summary
Gavaskar is not amused with the comparsions between kapil Dev and Pandya.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+