இனி தப்பிக்க வேற வழியே இல்ல.. பிட்ச் குறித்த சர்ச்சை.. கவாஸ்கர் ஓப்பன் டாக்
மும்பை: ஆஸ்திரேலியா அணி உடனான டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் உள்ள ஒரு பெரும் பலவீனத்தை சமாளிப்பதற்காகவே பிட்ச் கடினமாக உருவாக்கப்படுவதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என போட்டி போட்டு வருகின்றன.
இதனை அடுத்து இரு அணிகளும் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும்.

பிட்ச் சர்ச்சை
என்னதான் தொடர் கடைசி கட்டத்திற்கு சென்று விட்ட போதும் பிட்ச் மீதான சர்ச்சை மட்டும் தீராமல் உள்ளன. இதுவரை நடந்த மூன்று போட்டிகளுமே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் வெறும் மூன்று நாட்களுக்குள் போட்டிகள் முடிந்து விட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக இந்தூர் பிட்ச் மிக மோசமானது என ஐசிசி அறிவித்துள்ளது. எனவே நான்காவது டெஸ்ட்டாவது ஐந்து நாட்களும் நடைபெறுமா என விவாதம் நடந்து வருகின்றன.

கவாஸ்கர் கருத்து
இந்நிலையில் இந்தியாவின் பலவீனம் தான் இந்த குழப்பங்களுக்கு காரணம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்திய கலங்களில் பும்ரா - முகமது ஷமி போன்ற பவுலர்கள் மிக முக்கியம். ஆனால் முகமது சிராஜ் போன்ற அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது பின்னடைவாகும். இது இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதை காட்டுகிறது.

கடைசி வழி
இதனால் தான் இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைக்கின்றனர் என்று நினைக்கிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தத் தொடர் முக்கியமாகும். எனவே இதை விட்டால் இந்திய அணிக்கு வேறு வழி இல்லை என கவாஸ்கர் கூறியுள்ளார்.

ரோஹித் பதிலடி
இது ஒரு புறம் இருக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பிட்ச் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், சொந்த மண்ணில் எங்களது செயல்பாடு எதுவோ அதற்கேற்ற பிட்ச்களை ஏற்படுத்தக் கூறுகிறோம். இங்கு வீரர்களின் செயல்பாட்டை பார்க்க வேண்டுமே தவிர பிட்ச் குறித்து அதிகம் பேச வேண்டாம் என தடாலடியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications