டெஸ்ட் சீரிஸ் முடிஞ்ச உடனே இருக்கு... ரவி சாஸ்திரியின் புளுகு மூட்டைக்கு பின் கவாஸ்கர்
மும்பை : ரவி சாஸ்திரி இப்போதுள்ள இந்திய அணிதான் சிறந்த அணி என கூறியுள்ளது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என அனைவரையும் கோபமடைய வைத்துள்ளது.
ரவி சாஸ்திரியுடன் ஒரே நேரத்தில் இந்திய அணியில் ஆடிய கவாஸ்கர், அவருக்கு இந்தியாவின் முந்தைய டெஸ்ட் சாதனைகளை பட்டியலிட்டு காட்டி இருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து தொடரை இழந்த பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன சொல்லப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்த போது அவர் சம்பந்தமே இல்லாமல், பழைய இந்திய வீரர்களை சீண்டியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் காமெடி பேச்சு
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சாஸ்திரி, தற்போதுள்ள இந்திய அணி 15-20 வருடங்களில் எந்த இந்திய அணியும் செய்யாத அளவு ரன்கள் குவித்துள்ளது, வெற்றிகள் பெற்றுள்ளது என கூறினார். இந்த இந்திய அணி கடந்த 3 ஆண்டுகளில், வெளிநாடுகளில் 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் தொடர்கள் கைப்பற்றியதாக கூறினார். அவர் சொல்லும் 3 தொடர்களில் 1 வெஸ்ட் இண்டீஸ் மற்ற இரண்டும் இலங்கைக்கு எதிரானது.

கவாஸ்கர் விளக்கம்
இந்தியா, இலங்கை அணிக்கு எதிராக நீண்ட காலமாக டெஸ்ட் தொடரில் வெல்லாமல் இருந்தது. ஆனால், நாம் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்தில் தொடரும், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளும் வென்று இருந்தோம். 1980களில் இருந்த அணிகள் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸில் வென்றுள்ளன. ராகுல் டிராவிட் கூட வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்தில் வென்றார். மேலும், அவர் தலைமையில் இந்தியா முதல் முறையாக தென்னாபிரிக்காவில் வென்றது என விளக்கமளித்தார் கவாஸ்கர்.

ஒழுங்கா பேட்டிங் செய்ய தெரியவில்லை
இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடியதால், டெஸ்ட் போட்டிகளில் ஆட வரவில்லை. ஒருநாள் போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும் போது நான்கு ஸ்லிப் பீல்டர்கள் இருக்க மாட்டார்கள். கால்களை நகர்த்தி விளையாடுவதில் கோட்டை விட்டதுதான் இந்தியாவின் பின்னடைவு என தவறுகளை சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.

தொடர் முடிந்த உடன் இருக்கு...
ஏற்கனவே, இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வரும் கவாஸ்கர் மேலும் ஒரு விஷயம் கூறினார். தொடர் முடிந்த உடன் தான் சில விஷயங்களை நாம் பார்க்க முடியும். எனவே, ஐந்தாம் போட்டி முடிந்த உடன் தான் முழுமையாக இந்தியாவின் செயல்பாடுகளை நாம் பார்க்க முடியும் என கூறினார்.
அப்ப தொடர் முடிஞ்ச உடனே இன்னும் வைச்சு செய்வாரோ கவாஸ்கர்...


Click it and Unblock the Notifications