Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியும், தவானும் சும்மாதான இருக்காங்க.. ரஞ்சி தொடர்ல ஆட மாட்டாங்களா? பொங்கி எழுந்த கவாஸ்கர்

மும்பை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், தோனி மற்றும் தவான், இருவரும் ஏன் ரஞ்சி தொடரில் ஆடவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தோனி, தவான் இருவரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார். தவானை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் ரஞ்சி தொடரில் ஆடாமல், ஓய்வு எடுத்து வருகின்றனர். இதை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

தோனியின் மோசமான செயல்பாடு

தோனியின் மோசமான செயல்பாடு

தோனி சமீப காலங்களில் பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க தோனி தடுமாறிய நிலையில், அவரை டி20 அணியில் இருந்து நீக்கியுள்ளது தேர்வுக் குழு. இதனால் தோனி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர்களில் ஆடவில்லை. இந்த நிலையில் தோனி உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரில் ஆடவில்லை.

தவான் நீக்கம் ஏன்?

தவான் நீக்கம் ஏன்?

தவான் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஸ்விங் ஆகும் பந்துகளை சந்திக்க கடுமையாக தடுமாறினார். அங்கே ரன் குவிக்காததை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் தவான். தற்போது இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தவான் ஆடி வருகிறார்.

இருவரும் ரஞ்சியில் ஆடவில்லை

இருவரும் ரஞ்சியில் ஆடவில்லை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோனி, தவான் இருவரும் ஆடாத நிலையில், ரஞ்சி தொடரிலும் ஆடவில்லை. இது சரியல்ல, உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ள இரண்டு முக்கிய வீரர்கள் கிரிக்கெட் தொடர்பில்லாமல் மாதக்கணக்கில் இருந்தால் திறன் குறைந்து விடும் என முன்னாள் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

பார்ம் ரொம்ப முக்கியம்

பார்ம் ரொம்ப முக்கியம்

மேலும், "தோனியும், தவானும் ஏன் ரஞ்சி தொடரில் ஆடவில்லை என அவர்களிடமே கேட்கக்கூடாது. பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் தான் இது குறித்து நாம் கேட்க வேண்டும். இந்தியா சிறப்பாக ஆட வேண்டும் என்றால் வீரர்கள் உச்சகட்ட பார்மில் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆட வேண்டும்" என வறுத்தெடுத்தார் கவாஸ்கர்.

Story first published: Tuesday, December 4, 2018, 19:08 [IST]
Other articles published on Dec 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+