என்னய்யா ஏற்பாடு இது..!! வேஸ்ட்..!! இங்கி. வாரியத்தை நார், நாராய் கிழித்த முன்னாள் கேப்டன்..!!
Recommended Video
லண்டன்: இந்தியா, பாகிஸ்தான் போட்டி மைதானத்தை மழை பெய்யும் போது, ஏன் முழுமையாக மூடவில்லை என்று சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இது வரை இல்லாத அளவுக்கு படு மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது இந்த தொடர். கிரிக்கெட்டை விட வானிலை அறிவிப்பை அனைவரும் தினமும் விசாரிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.
இந்த தொடரில் இதுவரையில் 4 போட்டிகள் மழையால் ரத்தாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது, மழைக் காலம் என்று தெரிந்தும், போட்டிகள் திட்டமிடப்பட்டதால், ஐசிசி மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

வெளுத்த மழை
இந் நிலையில், மான்செஸ்டர் நகரிலுள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தினத்தன்று, காலை நேரத்தில் மைதானத்தில் மழை பெய்தது. அதற்கு முந்தைய நாட்களிலும் மழை கொட்டி தீர்த்திருக்கிறது.

மூடப்பட்ட மைதானம்
மழைக்காக மைதானத்தை மூடிய விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மைதானத்தை முழுமையாக மூடாதது சுத்த மோசம். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது.

தேவையான உபகரணங்கள்
உலக கோப்பை என்பது மிக முக்கிய தொடர். இங்கிலாந்து வானிலை நிலவரம் முன்பே தெரியும். ஆகையால், மைதானத்தை பாதுகாக்க தேவையான அத்தியா வசிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். கொல்கத்தாவில் கூட மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதனை, ஏன் இங்கிலாந்து பின்பற்ற வில்லை என்றார்.

கங்குலி கருத்து
தாதா கங்குலியும் இதே கேள்வியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் எழுப்பி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பை பொறுப்பாளர்கள், மைதானத்தை முழுவதுமாக மூட வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications