Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் வேணாம்.. தினேஷ் கார்த்திக் தான் சரியான ஆள்.. கவாஸ்கர் ஏன் இப்படி சொன்னாரு?

Recommended Video

பண்ட், கில் வேணாம்! தினேஷ் சரியான ஆள்: கவாஸ்கர் கருத்து- வீடியோ

மும்பை : இந்திய அணியில் முக்கிய வீரராக மாறி இருக்கும் தினேஷ் கார்த்திக்கை மாற்று துவக்க வீரராக பயன்படுத்த வேண்டும் என கூறி உள்ளார் கவாஸ்கர்.

இந்திய அணியில் ராகுல் அல்லது ஷுப்மன் கில் மாற்று துவக்க வீரர்களாக இருப்பார்களா என்ற பேச்சு இருக்கும் நிலையில் கவாஸ்கர் புதிய கோணத்தில் யோசனை தெரிவித்துள்ளார்.

நிரந்தர துவக்க வீரர்கள்

நிரந்தர துவக்க வீரர்கள்

இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, தவான் இருக்கின்றனர். இவர்கள் உலகக்கோப்பையில் ஆட உள்ளது உறுதி. ஆனாலும், இவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும், இவர்களுக்கு மாற்றாக எந்த வீரரை ஆட வைப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.

ராகுல் பார்ம் அவுட்

ராகுல் பார்ம் அவுட்

ராகுல் மாற்று துவக்க வீரராக அணியில் இருந்தார். ஆனால், அவர் பேட்டிங்கில் நீண்ட காலமாக பார்ம் அவுட் ஆகி இருந்தார். மேலும், பண்டியாவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தடையில் இருந்து மீண்டார்.

அணியில் இடம் சந்தேகம்

அணியில் இடம் சந்தேகம்

தடையால் ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களில் வாய்ப்பை இழந்த அவர், தடை நீக்கத்திற்குப் பின் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. தற்போது இந்தியா ஏ அணியில் ஆடி வரும் ராகுல் மூன்று போட்டிகளில் 55 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், ராகுல் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற இப்போதைக்கு வாய்ப்பில்லை.

அனுபவமற்ற ஷுப்மன் கில்

அனுபவமற்ற ஷுப்மன் கில்

அதே சமயம், அவருக்கு மாற்றாக அணியில் பயங்கர பில்ட்-அப்புடன் இடம் பெற்ற 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் இரண்டு போட்டிகளில் 13 மற்றும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அனுபவம் குறைந்த இவரை துவக்க வீரராக ஆட வைப்பது அணிக்கு பயன்படுமா என்பது சந்தேகம் தான்.

ரிஷப் பண்ட் ஆட வேண்டும்

ரிஷப் பண்ட் ஆட வேண்டும்

இந்நிலையில் தான், கவாஸ்கர் தினேஷ் கார்த்திக்கை துவக்க வீரராக பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார். அப்படி ரிஷப் பண்ட் அணியில் சேர்ந்தால், தினேஷ் கார்த்திக்கின் இடம் பாதிக்கப்படும்.

தினேஷ் கார்த்திக் துவக்க வீரரா?

தினேஷ் கார்த்திக் துவக்க வீரரா?

எனவே, தினேஷ் கார்த்திக் மாற்று துவக்க வீரராக செயல்படலாம் என கூறியுள்ளார் கவாஸ்கர். தினேஷ் கார்த்திக் தற்போது ஃபினிஷர் என்ற அந்தஸ்தில் அணியில் இருக்கிறார். அவரை துவக்க வீரராக ஆட வைப்பது சரியாக இருக்குமா?

ரிஷப் பண்ட் இருக்கிறாரே?

ரிஷப் பண்ட் இருக்கிறாரே?

அதே சமயம் ரிஷப் பண்ட் துவக்க வீரராக ஐபிஎல்-இல் ஆடியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட் அதிரடி வீரர். அவரை மாற்று துவக்க வீரராக வைத்துக் கொள்வது சிறப்பாக அமையும். ஆனால், கவாஸ்கர் ஏன் தினேஷ் கார்த்திக்கை துவக்க வீரராக வைத்துக் கொள்ளலாம் என கூறினார்?

Story first published: Monday, February 4, 2019, 18:09 [IST]
Other articles published on Feb 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+