For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆண்டர்சனை விட்டுட்டு அடுத்த சோலியைப் பாருங்கப்பா.. கவாஸ்கர்!

டெல்லி: ஆண்டர்சன் பிரச்சினையை விட்டு விட்டு அடுத்து நடக்க வேண்டியது குறித்து இந்திய அணி சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் வென்று, தொடரை வெல்வது குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இப்போது 4வது டெஸ்ட் போட்டியில் வெல்ல இந்தியாவுக்கு அதில் முழு கவனம் தேவை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டர்சன் விவகராத்தை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பந்தும் பேட்டும் பேசட்டுமே...

பந்தும் பேட்டும் பேசட்டுமே...

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், நான் எப்போதுமே இதைத்தான் கூறி வருகிறேன். மைதானத்தில் எப்போதுமே பந்தும், பேட்டும்தான் பேச வேண்டும். தற்போது நடந்ததை மறந்து விட்டு அடுத்தவற்றில் கவனத்தைத் திருப்புவதே நல்லது.

அதையை நினைத்துக் கொண்டிருந்தால்

அதையை நினைத்துக் கொண்டிருந்தால்

நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் எதிர் வரும் போட்டிகளில் வெல்வது கடினமாகி விடும். அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

மேட்ச் ரெப்ரீ வேற ஒருத்தர்

மேட்ச் ரெப்ரீ வேற ஒருத்தர்

அடுத்து உள்ள 2 போட்டிகளுக்கும் வேறு ஒரு போட்டி நடுவர் வருவதாக கருதுகிறேன். புதிதாக வரும் ரஞ்சன் மதுகல்லே, இரு தரப்பு வீரர்களும் போட்டியின் கெளரவத்தைக் குலைக்காத வகையில் கண்ணியமான முறையில், விளையாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடப்பதை உறுதி செய்வார் என்று நம்புகிறேன்.

வார்னிங் கொடுக்கலாம்

வார்னிங் கொடுக்கலாம்

ஆண்டர்சனுக்கும் மற்ற வீரர்களுக்கும் யாரும் தவறு செய்யாதீர்கள், தவறு செய்தால் தப்பமுடியாது என்ற அறிவுறுத்தலை அவர் கொடுக்கலாம். இது ஆரோக்கியமான விளையாட்டுக்கு வழி வகுக்கும்.

நல்ல பிள்ளைக்கு அழகு

நல்ல பிள்ளைக்கு அழகு

நடந்ததை குழி தோண்டிப் புதைத்து விட்டு அடுத்து நடக்கவுள்ளதைப் பற்றிக் கவலைப்படுவதுதான் நல்ல வீரர்கள் செய்யும் செயல். அதை இந்திய வீரர்கள் செய்ய வேண்டும். டோணியும், அவரது அணியினரும் அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் கவாஸ்கர்.

Story first published: Thursday, August 7, 2014, 13:51 [IST]
Other articles published on Aug 7, 2014
English summary
Former captain Sunil Gavaskar on Wednesday (August 6) said that India should put behind the James Anderson fracas behind and focus on the fourth Test against England, starting at Manchester today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+