கேப்டன் கோலி! நீங்க பண்ற வேலையால் டீமுக்கு தான் பாதிப்பு.. இனிமேல் இப்படி பண்ணாதீங்க
மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கோலி வழக்கம் போல தன் வம்படி வேலைகளை தொடங்கி விட்டார். ஆனால், இது அணியை பாதிக்கும் என கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
கோலி ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்-னிடம் இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளில் இருந்து தன் உரசலை ஆரம்பித்தார். இது பரபரப்பாக பேசப்பட்டாலும், அணிக்கு நல்லதல்ல என கூறுகிறார் கவாஸ்கர்.

வம்பு பண்ணும் கோலி
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என்றாலே ஏதேனும் தகராறு இல்லாமல் இருக்காது. இந்த நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா அமைதியாகவே இருந்தது. பெரிய அளவில் எந்த வீரரும் கோபமூட்டும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை. ஆனால், இந்திய கேப்டன் கோலி, 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்-னை வம்பிழுத்தார்.

கோலி யோசிக்க வேண்டும்
இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் கவாஸ்கர், "இந்திய கேப்டன் கோலி அடுத்த முறை ஆஸ்திரேலியர்களை வம்பிழுக்கப் போகும் முன் பல விஷயங்களையும் யோசிக்க வேண்டும்" என கூறினார்.

அணி வீரர்களை பாதிக்குமா?
"சில வீரர்கள் இயல்பாகவே சண்டை போடும் மனப்பான்மையில் இருப்பார்கள். ஆனால், அது உங்கள் அணி வீரர்களையும் பாதிக்குமா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்" என கவாஸ்கர் கூறினார்.

பழக்கம் இல்லை
"இது போன்ற சண்டை போடும் மனப்பான்மையுடன் விளையாடுவது ஆஸ்திரேலியர்களுக்கு பழக்கமானது. ஆனால், இந்தியர்களுக்கு அது டிஎன்ஏ-வில் இல்லை. நமக்கு அது வராத ஒன்று. ஆனால், இங்கே நாம் தான் அதை ஆரம்பித்து இருக்கிறோம்" எனவும் கூறினார்.


Click it and Unblock the Notifications