இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. "கெய்ல் புயல்" குறித்து கவாஸ்கர் வார்னிங்!
மும்பை: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டார் கிறிஸ் கெய்ல் போட்ட போட்டைப் பார்த்து சுனில் கவாஸ்கரே மிரண்டு போய் விட்டார் போலும். கெய்ல் அடித்த சதம் அனைத்து அணிகளுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கு மிக மிக ஆபத்தானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை டி 20 போட்டியில் அதகளமாக ஆடிய கெய்ல், 48 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தி விட்டார்.
இந்தப் போட்டியலி் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபாரமாக வெற்றி பெற்று அத்தனை அணிகளின் வயிற்றிலும் ஆசிடை ஊற்றி விட்டது.

கவாஸ்கர் எச்சரிக்கை
இந்த நிலையில் கெய்ல் பார்மில் இருப்பது இந்தியாவுக்கு ஆபத்தானது. இந்தியா மட்டுமல்லாமல் மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதும் அனைத்து அணிக்கும் ஆபத்தானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

நல்லதுக்கு இல்லை
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், இது நிச்சசயம் நமக்கு நல்லதுக்கு இல்லை. கிறிஸ் கெய்ல் மிகவும் பசியோடு உள்ளார். அவரது இந்த பார்ம் எதிரணிகளுக்கு நிச்சயம் கெட்ட செய்தியாகும்.

மிகப் பெரிய மிரட்டல்
183 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தனி மனிதராக துரத்திப் பிடித்துள்ளார் கெய்ல். இது மிகப் பெரிய விஷயம். மிகப் பெரிய மிரட்டல் ஆட்டம்.

கெய்லால் முடியாதது எதுவும் இல்லை
ஓவருக்கு 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் எந்த வகையான போட்டியிலும் அது கடினம்தான். ஆனால் கெய்ல் இருக்கும்போது எதுவும் சாத்தியமே என்பதை அவர் நிரூபித்து விட்டார். எதிரணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications