For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு அடிச்சா பொறி பறக்குமோ.. எப்படி அடிச்சா கிலி பிறக்குமோ.. அதுதாங்க சூப்பர் சிக்ஸர்.. இதோ லிஸ்ட்டு

பொறி கலக்கும் சிக்ஸர் லிஸ்ட்... முதலிடம் வேற யாருக்கு? நம்ம கெயிலுக்குதான்

மும்பை: சிக்ஸர்னு வந்துட்டா அது நம்ம யுனிவர்ஸ் ஹீரோ கிறிஸ் கெய்ல்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. நவீன கிரிக்கெட்டில் அருமையாக சிக்ஸர் விளாசிய 6 பேர் கொண்ட பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

சச்சின் 100வது சதம் அடித்தது இன்று தான்

கிரிக்கெட்டில் சதம் அடிப்பது போலவே இன்னொரு பரவசமான விஷயம் இந்த சிக்ஸர் அடிப்பதுதான். சிக்ஸர் அடிப்பது ஒரு கலை. அதை பலரும் செய்து விடுவதில்லை. சிலருக்கு மட்டுமே அது அருமையாக வரும். அப்படிப்பட்ட வீரர்களைத்தான் பட்டியலிட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்தப் பட்டியயலில் இந்திய வீரர்கள்தான் அதிகம் உள்ளனர். என்ன இருந்தாலும் இந்தியப் பாசம் போகாது இல்லையா.. அதேசமயம், அந்த மூன்று பேருமே அதற்கு முழு தகுதி உடையவர்கள்தான்.

சிக்ஸர் சித்து

சிக்ஸர் சித்து

சிக்ஸர் அடிப்பதில் ஒரு காலத்தில் இந்தியாவில் சித்து நிபுணராக இருந்தார். அதேபோல மேற்கு இந்திய அணி வீரர்கள் பலரும் கூட சிக்ஸர் மன்னர்கள்தான். மிகப்பெரிய சிக்ஸர்களை அடிப்பதில் அவர்கள்தான் வல்லவர்களாக இருந்தனர். இப்போதும் கூட அப்படித்தான் பல வீரர்கள் உள்ளனர். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர் அடிப்பவர்களாக இருந்தாலும் கூட அதில் நிபுணர்களாக இருப்பவர்கள் சிலரே.

சிக்ஸர் அடிப்பவர்களே ஹீரோ

சிக்ஸர் அடிப்பவர்களே ஹீரோ

ரசிகர்களுக்கு சிங்கிள் சிங்கிளாக எடுப்பவர்களை விட சிக்ஸர்கள் விளாசுபவர்களைத்தான் ரொம்ப பிடிக்கும். காரணம் அவர்களைத்தான் சூப்பர் ஹீரோக்களாக உடனே உயர்த்துகிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் ஒவ்வொரு அணியிலும் சூப்பர் ஹீரோக்களாக வரவே பலரும் துடிக்கிறார்கள். ஆனால் சிலரே சாதிக்கிறார்கள். அந்த சாதனையாளர்கள்தான் சோப்ராவின் பட்டியலில் உள்ளனர்.

கிறிஸ் கெய்லுக்கு முதலிடம்

கிறிஸ் கெய்லுக்கு முதலிடம்

இதில் முதலிடத்தில் வருகிறார் யுனிவர்ஸ் ஹீரோ என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கிறிஸ் கெய்ல். அதிரடி வீரரான கெய்ல்., சிக்ஸர்கள் விளாசுவதில் உண்மையிலேயே மன்னன்தான். அதிலும் ஐபிஎல் போட்டிகளில் இவர் பிரமாதமாக ஆடி அதிர வைத்துள்ளார். இவரே ஆகாஷ் சோப்ராவின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். உலக அளவில் மொத்தம் 860 சிக்ஸர்களை இவர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவுக்கு 2வது இடம்

ரோகித் சர்மாவுக்கு 2வது இடம்

2வது இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா வருகிறார். தற்போதைய வீரர்களில் ரோஹித் சர்மா போன்ற சிறப்பான வீரர்களை காண்பது அரிது. அந்த வகையில் எந்த மாதிரியான இடத்திலும் விளையாடக் கூடிய திறமை படைத்தவர் ரோகித் சர்மா. இவருக்கு ஆகாஷ் சோப்ராவின் பட்டியலில் 2வது இடம் கிடைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரும் ரோகித் சர்மா. ஐபிஎல் விருந்துக்காக காத்துள்ளார்.

யுவராஜ் சிங்குக்கு 4வது இடம்

யுவராஜ் சிங்குக்கு 4வது இடம்

4வது இடத்தில் யுவராஜ் சிங் வருகிறார். இவர் சிக்ஸர் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர். தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அதில் முக்கியப் பங்காற்றியவர் யுவராஜ் சிங்தான். அதேபோல தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் கூட யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

5வது இடத்தில் கூல் கூல் தோனி

5வது இடத்தில் கூல் கூல் தோனி

5வது இடத்தில் இருப்பவர் நம்ம ஊர் நாயகன் தோனி. ஐசிசியின் மூன்று டிராபிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. அதாவது ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என 3 கோப்பைகளை வென்றவர். ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பெயர் போனவர். இவர் மொத்தம் 568 சிக்ஸர்களை விளாாசியுள்ளார்.

டிவில்லியர்ஸுக்கு 6வது இடம்

டிவில்லியர்ஸுக்கு 6வது இடம்

ஆறாவது இடத்தில் இருப்பவர் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஆவார். இவர் டிசைன் டிசைனாக அதிரடி காட்டக் கூடியவர். டிவில்லியர்ஸ் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்க அணிக்காக பல வெற்றிகளைத் தட்டிக் கொடுத்தவர். உலகஅளவில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. ஏலியன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவரும் டிவில்லியர்ஸ்தான்.

Story first published: Monday, March 16, 2020, 15:23 [IST]
Other articles published on Mar 16, 2020
English summary
Chris Gayle got first place in Akash Chopra's 6 six hitters list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X