அனுபவமற்ற, பொறுப்பற்ற, மூளையற்ற, முட்டாள்தனமான.. அடடா ஜெப்ரி பாய்காட் ரொம்ப டென்ஷனா இருக்காரே!
லண்டன் : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் மோசமான பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட்.
அவர் எழுதிய கட்டுரையில், இந்திய அணியின் பேட்டிங் தவறுகள் குறித்து கூறியிருக்கிறார். அதில் இந்திய அணி இங்கிலாந்து பிட்ச்களின் தன்மை, இங்கே வேகப்பந்துவீச்சின் வேகம், நகரும் தன்மை (Swing) உள்ளிட்ட அடிப்படை பற்றி கூட சிந்திக்காமல், தவறான வகையில் பேட்டிங் செய்து வருவதாக கூறி சாடியுள்ளார். அவரது கருத்துகள் சிலவற்றை காண்போம்.

“பெரிய அணிகளும், பெரிய வீரர்களும், இந்திய அணி போல பந்து நகர்வதாலும், சரியாக பிட்ச் ஆவதாலும் மட்டுமே வீழ்ந்துவிட மாட்டார்கள். கிரிக்கெட்டை பல நாடுகளில், பல பிட்ச்களில், பல கால சூழ்நிலைகளிலும் ஆடுவதன் முக்கிய நோக்கமே, உங்களின் நுட்பம், குணம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மை ஆகியவற்றை சோதிப்பதுதான்”
“இதுவரை இந்திய வீரர்கள் தங்களையும், தங்கள் ஆதரவாளர்களையும் கைவிட்டுவிட்டார்கள். பேட்டிங் மிக அனுபவமற்றதாகவும், பொறுப்பற்றதாகவும், முட்டாள்தனத்தை ஒட்டியும் இருந்தது. ஆசையூட்டும் வகையில் வெளிப்புறம் நகர்ந்து (Out Swinger) வரும் பந்தை, அடித்து ஆட நினைப்பது சிந்தனையற்ற செயல்”
“மிட்-விக்கெட் திசையில் இருந்து வரும் வெளியே நகரும் பந்துகளை அடிக்க முற்பட்டு, ஸ்டம்ப்களை இழந்தோ, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தோ ஆட்டமிழந்துவிட்டு ஆச்சரியமடைவது, மூளையற்ற செயல். பல அணிகள் சொந்த மண்ணில் வெல்வது, வெளிநாடுகளில் மோசமாக தோற்பது என டெச்ட் கிரிக்கெட் ஒரு முறையற்ற அபத்தமாக மாறி வருகிறது”. இது போன்ற கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் பாய்காட். மேலும், இவர், இந்திய அணி சரியான திட்டமிடல், பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதுவரை, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியை பலரும் விமர்சித்துள்ளனர். அதில், மிகவும் அறிவுப்பூர்வமாகவும், அதே சமயம் கடும் வார்த்தைகளாலும் விமர்சித்து இருப்பது ஜெப்ரி பாய்காட் தான்.
Story first published: Wednesday, August 15, 2018, 13:15 [IST]
Other articles published on Aug 15, 2018


Click it and Unblock the Notifications