Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாகாவில் இன்று மேலும் ஒரு சாதனை... லாரா சாதனையை சமன் செய்தார் பெய்லி!

பெர்த்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இன்று இன்னொரு சாதனையும் படைக்கப்பட்டது.

இன்று படைக்கப்பட்ட 2வது சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தப் போட்டியில் இதுவரை மூன்று சாதனைகள் படைக்கபப்ட்டுள்ளன.

முதல் சாதனை குக்குக்கு

முதல் சாதனை குக்குக்கு

முதல் சாதனை இளம் வயதில் 100 டெஸ்ட் கண்ட வீரராக இருந்து வந்த சச்சினை மிஞ்சி அதை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் குக். இந்த டெஸ்ட் போட்டி குக்குக்கு 100வது டெஸ்ட்டாகும்.

2வது சாதனையும் அதே குக்குக்கே... முட்டையுடன்

2வது சாதனையும் அதே குக்குக்கே... முட்டையுடன்

அதே குக் இன்று இன்னொரு சாதனையை நிகழ்த்தினார். அதாவது தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் டக் அவுட் ஆனார். இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

லாரா சாதனையை சமப்படுத்திய பெய்லி

லாரா சாதனையை சமப்படுத்திய பெய்லி

இன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜார்ஜ் பெய்லி 3வது சாதனையைப் படைத்தார். ஒரே ஓவரில் அவர் 28 ரன்களை விளாசி இந்த சாதனையைப் படைத்தார். ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிகம் ரன் எடுத்தவர் என்ற பெருமையை இது நாள் வரை லாராதான் வைத்திருந்தார்.

3 சிக்ஸ்.. 2 பவுண்டரி.. ஒரு சிங்கிள்

3 சிக்ஸ்.. 2 பவுண்டரி.. ஒரு சிங்கிள்

இன்று ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு ரன் எடுத்து லாரா சாதனையை சமன் செய்தார் பெய்லி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாதித்திருந்த லாரா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாதித்திருந்த லாரா

லாரா, கடந்த 2003ம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது இதே ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்திருந்தார்.

இது 3வது டெஸ்ட்

இது 3வது டெஸ்ட்

பெய்லிக்கு இது 3வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வயது 31 ஆகிறது.

Story first published: Monday, December 16, 2013, 17:28 [IST]
Other articles published on Dec 16, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+