Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா ஸ்லிப் பீல்டர பாத்து பேட்டிங் பண்ற.. நேரா நில்லுப்பா.. ஒரே காமெடியா இருக்கு

Recommended Video

ஸ்லிப் பீல்டர பாத்து பேட்டிங் பண்ற.. நேரா நில்லுப்பா..

கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவில் தென்னாபிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே ஆஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் ஆடியது.

அதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஒருவர் விசித்திரமான முறையில் பேட்டிங் செய்ய நின்றது, சிரிப்பை வரவழைத்துள்ளது.

தென்னாபிரிக்க கேப்டன் அந்த வீரரை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது மேலும், சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது.

பீல்டர் திசையை பார்த்து நின்றார்

பீல்டர் திசையை பார்த்து நின்றார்

ஆஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணியின் கேப்டனாக இந்த பயிற்சி போட்டியில் இடம் பெற்ற ஜார்ஜ் பெய்லி, பேட்டிங் செய்ய வந்தார். அப்போது மற்ற பேட்ஸ்மேன்களை போல பந்துவீச்சாளர் ஓடி வரும் திசைக்கு நேராக நிற்காமல், பின்புறம் ஸ்லிப் பீல்டர் இருக்கும் திசையை பார்க்க நின்று கொண்டு தலையை மட்டும் திருப்பி பந்துவீச்சாளரை பார்க்க நின்றார்.

பீல்டிங்கை மறந்து சிரித்த கேப்டன்

பீல்டிங்கை மறந்து சிரித்த கேப்டன்

ஸ்லிப்பில் நின்று இதை பார்த்த தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாப் டு ப்லேசிஸ் சிரிக்க ஆரம்பித்தார். பீல்டிங்கில் கவனம் குறைந்து இந்த பேட்டிங் முறையை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார் அவர். அதை பல ரசிகர்களும் குறிப்பிட்டுள்ளனர். வர்ணனையாளரும் அதை குறிப்பிட்டுள்ளார்.

பேட்டிங் திறன் மேம்படும்

இதன் வீடியோ காட்சியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வீடியோவோடு, ஜார்ஜ் பெய்லி தான் ஏன் இப்படி பேட்டிங் செய்கிறேன், இது எப்படி தன் பேட்டிங் திறனை மேம்படுத்த உதவுகிறது என கூறிய விளக்கமும் இடம் பெற்றுள்ளது.

இதெல்லாம் ரொம்ப பழசு

பலரும் இது புது முறை பேட்டிங் என கூறிய நிலையில், ஒருவர் 1924-லேயே இந்த முறையை சில வீரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய பகுதியை ஒரு புத்தகத்தில் இருந்து படம் எடுத்து பகிர்ந்து இருந்தார். அதில் விக்கெட் கீப்பரை பார்த்து நின்று வேகப் பந்துவீச்சை மெக்கிளாரன் என்ற வீரர் எதிர்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, October 31, 2018, 18:39 [IST]
Other articles published on Oct 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+