இங்கு 'டன்' கணக்கில் ரன் குவிப்பது.. வெளிநாட்டில் 'டண்டணக்கா' என தடுமாறுவது.. இதே பொழப்பு!
மொஹாலி: ஜெய்ப்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அதிரடியாக ரன் குவித்தது போல மொஹாலியில் நடைபெறும் 3வது ஒரு நாள் போட்டியிலும் பெருமளவில் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.
காரணம், முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமான முறையில் பிட்ச்சைப் போட்டு வைத்து விட்டனராம்...
இந்திய கிரிக்கெட் மைதானங்கள் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரன் குவிப்புதான். காரணம், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதமாகத்தான் காலம் காலமாக பி்ட்ச் போட்டு வருகிறார்கள். அதைத்தான் ஜெய்ப்பூர் போட்டி நிரூபித்தது.
தற்போது 3வது போட்டி நடைபெறவுள்ள மொஹாலி பிட்ச்சும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்குமாம்.

நாளைக்கு 3வது போட்டி
மொஹாலியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

கியூரேட்டர் என்ன சொல்றார்னா...
இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பிட்ச் போட்டுள்ளதாக அந்த மைதானத்தின் கியூரேட்டர் கூறியுள்ளார். நிறைய ரன்களை இங்கு குவிக்கலாம்.. என்றும் அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.

முதல் 2 போட்டிகளில் குவிந்த ரன்கள்
முதல் ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா பெருமளவில் ரன் குவித்தது. அதாவது 304 ரன்களைக் குவித்தது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் ஆடி 359 ரன்களைக் குவிக்க, தொடர்ந்து ஆடிய இந்தியா 362 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைப் பார்த்து 'அவ்வ்வ்' என்றது.

மறுபடியும் மட்டையடிதான்...
தற்போது மொஹாலியிலும் ரன் குவிக்க வசதியாக பிட்ச்சை தயார் செய்து வைத்து காத்திருக்கிறார்களாம்.

அடிச்சு நொறுக்கலாம்...
இதுகுறித்து மொஹாலி பிட்ச் கியூரேட்டர் தல்ஜீத் கூறுகையில், சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நிறைய ரன்கள் குவிக்கப்பட்டது. அதேபோல 3வது போட்டியிலும் ரன் குவிக்கலாம் என்றார்.

2வது பவுலிங் எடுபடும்
மேலும் அவர் கூறுகையில், 2வதாக பவுலிங் செய்யும் அணிக்கு சற்று பலன் கிடைக்கும். ஆனால் முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு கஷ்டம்தான் என்றும் பந்து வீச்சாளர்களை பீதிக்குள்ளாக்குகிறார்.

இப்பத்தானே மழை நின்னிருக்கு...
தல்ஜீத் மேலும் கூறுகையில், இப்போதுதான் பருவ மழை முடி்ந்துள்ளது. எனவே மாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். எனவேதான் 2வது பவுலிங்குக்கு அது சாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications