Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க சேட்டைக்கு ஒரு அளவே இல்லியா..? ரொம்ப கேவலமா இருக்கு..! ஐசிசியை பங்கம் செய்த 2 ஜாம்பவான்கள்

லண்டன்: ஆஷஸ் தொடரில் பெயர், நம்பர் பொறித்த ஜெர்சி அணிந்து வீரர்கள் விளையாடுவதற்கு, முன்னாள் வீரர்கள் கில் கிறிஸ்ட், பிரெட் லீ ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை சாம்பியன் என்ற நடை முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அப்படியான ஒரு ஐசிசியில் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடந்து வரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியாகும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா கலந்து கொள்ளும். அதன் பின்னர், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும்.

2021ல் இறுதிப்போட்டி

2021ல் இறுதிப்போட்டி

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இறுதி போட்டி நடக்கும். இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்சியில் மாற்றம்

ஜெர்சியில் மாற்றம்

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை போன்று, டெஸ்ட் போட்டிக்கான வெண்மை நிற ஜெர்சியிலும் வீரர்களின் பெயரும் நம்பரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெயர் மற்றும் நம்பர் பொறித்த ஜெர்சியுடன் விளையாடி வருகின்றனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட், பிரெட் லீ ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

பெயர் பிடிக்கவில்லை

பழைய முறையையே ஆதரிப்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு கூறியதை நான் திரும்ப வாங்கி கொள்கிறேன். டெஸ்ட் அணி ஜெர்சியில் நம்பர் மற்றும் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று பதிவிட்டார்.

அடுத்த டுவிட்

பிறகு மனுஷன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அடுத்த டுவீட்டை தட்டி விட்டார் கில்கிறிஸ்ட். அதில் தனது எதிர்ப்பை திட்ட வட்டமாகவும் உறுதியாகவும் பதிவு செய்தார். அதில், நான் எனது மன்னிப்பை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். டெஸ்ட் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் நம்பரும் இடம் பெற்றிருப்பது பிடிக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

பிரெட் லீ டுவிட்

இதே போன்று முன்னாள் வீரர் பிரட் லீயும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் சட்டையில் நம்பரையும், பெயரையும் பயன்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறேன்.

முடியவே முடியாது

முடியவே முடியாது

இது என்ன கேலிக்கூத்தாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்த பல மாற்றங்களை வரவேற்கின்றேன். ஆனால் இந்த முடிவை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறினார்.

Story first published: Saturday, August 3, 2019, 16:42 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+