பொறுமையான வீரர்தான்... ஆனா ஆரம்பத்துல பதற்றமாயிடறாரு... ஜடேஜா விளக்கம்
மெல்போர்ன் : இந்தியாவின் துவக்க வீரர் சுப்மன் கில், பொறுமையான வீரர்தான் என்றும் ஆனால் துவக்கத்தில் அவர் பதற்றமடைந்து விடுவதாகவும் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை துவங்கி 3வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் ஆடிய சுப்மன் கில் 45 ரன்களை அடித்து அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தார்.

45 ரன்களை அடித்த கில்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், 45 ரன்களை அடித்துள்ளார். இந்த போட்டியின்மூலம் தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக கில் பங்கேற்றுள்ளார்.

3வது அதிக ஸ்கோர்
இந்த போட்டியில் அவர் 65 பந்துகளில் 45 ரன்களை அடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தங்களது முதல் போட்டியில் ஆடியுள்ள இந்திய வீரர்களில் 3வது அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற பெருமை கில்லிற்கு கிடைத்துள்ளது. இந்த 45 ரன்களில் 8 பவுண்டரிகளும் அடக்கம்.

கில் குறித்து ஜடேஜா பாராட்டு
இந்நிலையில் பேட்ஸ்மேனாக கில் மிகவும் பொறுமையானவர் என்று ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பாராட்டு தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பான தொழில்நுட்பங்களை அவர் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் துவக்கத்தில் பதற்றமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

சிறப்பான கில்லின் ஆட்டம்
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நின்று ஆடத்துவங்கிவிட்டால் சிறப்பாக விளையாடுவதாகவும் ஜடேஜா பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கில்லிற்கு சிறப்பான துவக்கமாகவே அமைந்திருந்தது. அதிர்ஷ்டமும் அவருக்கு கை கொடுத்தது. அவரது விக்கெட்டை எதிரணி இரண்டு முறை தவறவிட்டது.


Click it and Unblock the Notifications