For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுங்க... ரிஷப் பந்த் அப்புறமா ஆடிக்கலாம் - கம்பீர்

By Aravinthan R

டெல்லி : தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ஆடிவரும் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க தடுமாறி வருவதால், இளம் வீரரான ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை பலரும் வரவேற்றுள்ள நிலையில், கவுதம் கம்பீர் தினேஷ் கார்த்திக்குக்கு மற்றொரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேசிய கம்பீர், “கார்த்திக் தன் கிரிக்கெட் வாழ்வில் தற்போது வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறார். எனவே, அவருக்கு ஒரு போட்டி குறைவாக கொடுப்பதை விட அதிகமாக கொடுக்கவேண்டும். அடுத்த போட்டியிலோ, அதற்கடுத்த டெஸ்ட் போட்டியிலோ அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் எதன் பின் நாம் அவரை பார்க்கவே முடியாது. ரிஷப் காத்திருக்கலாம். அவருக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

give one more chance for dinesh karthik over rishab pant says gautam gambhir


ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரும் இந்த டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம், விரித்திமான் சாஹா காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருப்பதுதான். தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றது முதல் சாஹாதான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது.

எனினும், ரன் குவிக்கும் விக்கெட் கீப்பருக்கான தேடல் இன்னும் முடிவடையவில்லை என்பதே உண்மை. ரிஷப் பந்த். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு முதல் தர போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்தார். முதல் தர போட்டிகளில் 54 ஆவரேஜ் வைத்துள்ளார். எனவே, தான் இவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.





Story first published: Saturday, August 18, 2018, 13:34 [IST]
Other articles published on Aug 18, 2018
English summary
give one more chance for dinesh karthik over rishab pant says gautam gambhir
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+