Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்னஸ் பயிற்சியில தேறியாச்சு... டீமோட இணையவிருக்கும் கேஎல் ராகுல்... மிகச்சிறப்பு!

சென்னை : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் ஏற்பட்ட கேஎல் ராகுல் இறுதி இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்ட அவர் தற்போது தனது பிட்னசை நிரூபித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் கூடிய விரைவில் அவர் இந்திய அணியில் இணையவுள்ளார்.

காயம் ஏற்பட்ட கேஎல் ராகுல்

காயம் ஏற்பட்ட கேஎல் ராகுல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கேஎல் ராகுல் இறுதி இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். சிட்னி போட்டிக்கு முன்னதாக நெட் பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

கேஎல் ராகுல் சிகிச்சை

கேஎல் ராகுல் சிகிச்சை

இதையடுத்து பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது அவர் தனது பிட்னசை நிரூபித்து என்சிஏவிலிருந்து வெளிவந்துள்ளார். இங்கிலாந்து -இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள நிலையில் விரைவில் அவர் அணியில் இணையவுள்ளார்.

விரைவில் இணையும் ராகுல்

விரைவில் இணையும் ராகுல்

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தன்னுடைய பிட்னஸ் டெஸ்ட்டை சிறப்பாக என்சிஏவில் முடித்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதை காட்டிலும் சிறப்பான உணர்வு இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடரில் இணைய ஆர்வம்

தொடரில் இணைய ஆர்வம்

அணி வீரர்களுடன் மீண்டும் இணைவது மிகவும் சுவாரஸ்யமானது என்றும் இந்தியாவிற்காக விளையாடுவது கௌரவமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் இந்திய தொடரில் இணைய ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல் விரைவில் இந்திய அணியில் இடம்பெறவுள்ள நிலையில், குவாரன்டைனை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் முதல் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம்தான்.

Story first published: Tuesday, February 2, 2021, 15:38 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+