மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் தீவிர ரசிகர்கள் நான் என்று கூறியுள்ள ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஜாம்பவான் மெக்ராத் ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
இந்திய அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வரும் பும்ரா பலமுறை காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் உலகக் கோப்பை தொடர் வருவதற்கு முன் பும்ரா தற்போது உடல் தகுதியை மீட்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளார்.

இந்த நிலையில் பும்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ள மெக்ராத், இந்திய அணிக்காக பல சிறப்பான செயல்பாட்டை பும்ரா செய்திருக்கிறார். அவருடைய பந்துவீச்சு ரெக்கார்டும் சூப்பராக இருக்கிறது. இதனால் நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால் அவருடைய பந்து முறைதான் அவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பந்து வீசும் முறை காரணமாக அவர் உடலில் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர் முழு உடல் தகுதியுடனும் பலமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இன்னும் அவரால் பல ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும். ஆனால் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்போது வேக பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது.
பிராட்,ஆண்டர்சன் போன்ற வீரர்கள் எல்லாம் சில காலம் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்து தங்களுடைய பலத்தை அதிகரிக்க வேண்டும். எனவே பும்ரா வரும் காலத்தில் ஏதேனும் ஒரு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து மூன்று பிரிவு போட்டிகளிலும் விளையாடுவது இனி கடினமாக மாறிவிடும்.பும்ரா இளம் வீரர் தான் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு அவருடைய உடல் தகுதி கை கொடுக்க வேண்டும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அதிகப்படுத்திக் கொள்ள சுலபமான பந்துவீச்சு முறையை கையாண்டேன் என்று மெக்ராத் கூறியுள்ளார்.