மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சி அணிந்து, ராஜஸ்தானை எதிர்கொண்டு சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி தான் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார்.
டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து விராட் கோலி டக் அவுட்டாக, ஷாபாஸ் அகமது 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற அணிகளுக்கு எல்லாம் பேட்டிங் வரிசை 7 அல்லது 8வது வீரர்கள் வரை இருப்பார்கள்.

ஆனால் ஆர்சிபி அணியில் மட்டும் தான் பேட்டிங் வரிசை 4வது வீரரை தாண்டிவிட்டாலே முடிந்துவிடும். அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டு தான் நம்ம ஆர்சிபி கிட்ட இருக்கு. இதனால் 12 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய ஆர்சிபி அணியை மீண்டும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு டுபிளசிஸ், மேக்ஸ்வெல் தலையில் வந்து விழுந்தது.
கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன மேக்ஸ்வெல், இன்றைய ஆட்டத்தில் அதற்கும் சேர்த்து ரன்கள் அடித்துவிட்டார். ராயல்ஸ் பந்துவீச்சை பொளந்து மேக்ஸ்வெல், 27 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்துவிட்டார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50வது அரைசதத்தை அடித்துள்ள மேக்ஸ்வெல், 50 ரன்கள் அடிப்பதற்குள் 3 சிக்சர்,5 பவுண்டரிகளை அடித்தார்.
இதன் மூலம் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 2021ஆம் ஆண்டு 513 ரன்களும், 2022ஆம் ஆண்டு 301 ரன்களும், 2023ஆம் ஆண்டு 210 ரன்களும் இதுவரை அடித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் தடுமாறும் மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக மட்டும் பட்டையை கிளப்பி வருகறார்.