For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ்ப் பெண்ணை காதலித்து.. இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து.. அதிர வைத்த ஆஸி. வீரர்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளேன் மேக்ஸ்வெல், வினி ராமன் என்ற தமிழ்ப் பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.

கடந்த சில நாட்கள் முன்பு மேற்கத்திய முறைப்படி மோதிரம் அணிந்து தன் திருமண நிச்சயதார்த்தத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

தற்போது இந்திய முறைப்படி இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து பெரிய அளவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதிரடி ஆல் - ரவுண்டர்

அதிரடி ஆல் - ரவுண்டர்

ஆஸ்திரேலிய அதிரடி ஆல் - ரவுண்டர் கிளேன் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியஅணி மற்றும் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று உலக அளவில் புகழ் பெற்றவர். டி20 போட்டிகளில் அதிரடி ஆல் - ரவுண்டர்களில் முதன்மையான இடத்தில் இருக்கிறார்.

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகள்

அவர் வினி ராமன் என்ற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களாக காதல் வயப்பட்டு இருந்தார். இருவரும் ஓய்வு நேரத்தில் டேட்டிங் செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது என தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

சறுக்கல்கள்

சறுக்கல்கள்

இடையே மேக்ஸ்வெல் வாழ்வில் சில சறுக்கல்கள் வந்தன. மன அழுத்தம் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்தார். பின் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் பட்டையைக் கிளப்பிய அவர் தொடர்ந்து போட்டிகளில் ஆடி வந்தார்.

திருமணம் உறுதி

திருமணம் உறுதி

இதற்கிடையே தான் வினி ராமனை திருமணம் செய்து கொள்ள இருப்பதை உறுதி செய்தார். அப்போதே அந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது. மேக்ஸ்வெல்லின் வருங்கால மனைவி வினி ராமன் யார் என பலரும் தேடத் துவங்கினர்.

யார் இந்த வினி ராமன்?

யார் இந்த வினி ராமன்?

வினி ராமன் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர் மெல்போர்ன் நகரில் 1993ஆம் ஆண்டு பிறந்தார். மருத்துவ அறிவியல் படித்து, அதே நகரில் பார்மசிஸ்ட் ஆக பணி புரிந்து வருகிறார். மேக்ஸ்வெல்லும் அதே நகரை சேர்ந்தவர் தான்.

வலம் வந்தனர்

வலம் வந்தனர்

2017 முதல் இருவரும் பழகத் துவங்கி தங்கள் காதலை சமூக வலை தளத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். 2019 ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் விழாவில் இருவரும் சேர்ந்து பங்கேற்ற போது அது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம்

இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம்

இந்த நிலையில், 2020இல் மேற்கத்திய முறைப்படி மோதிரம் அணிவித்து எளிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டாலும், இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வினி ராமன் முடிவு செய்தார். மேக்ஸ்வெல் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறப்பாக நடந்தது

சிறப்பாக நடந்தது

அதன்படி, இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் உடை அணிந்து, மெஹந்தி போட்டுக் கொண்டு, வந்தவர்களுக்கு உணவிட்டு சிறப்பாக நடந்துள்ளது கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் நிச்சயதார்த்தம். அதன் புகைப்படங்கள் சிலவற்றை வினி ராமன் வெளியிட்டுள்ளார்.

நன்றி கூறினார்

நன்றி கூறினார்

மிக குறுகிய நாட்களில், இரு வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தும் அவர்கள் அனைவரும் வருகை தந்ததை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் வினி ராமன். விரைவில் இந்திய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.

இது முன்னோட்டம்

தன் பதிவில், மேக்ஸ்வெல்லுக்கு திருமணம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த நிச்சயதார்த்தம் இருக்கும் எனவும் வினி ராமன் கூறி உள்ளார். கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு நம் வாழ்த்துக்கள்.

Story first published: Sunday, March 15, 2020, 18:54 [IST]
Other articles published on Mar 15, 2020
English summary
Glenn Maxwell engaged with Tamil girl in Indian style. Both dressed up in Indian attire.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+