Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு சூப்பர்... பஞ்சாப் அணிக்கு சொதப்பலா... காரணம் சொல்கிறார் மாக்ஸ்வெல்

துபாய் : கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல் சிறப்பாக விளையாடியிருந்தார்.

இதையடுத்து அவரை ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வருகிறார் மாக்ஸ்வெல். அதற்கு காரணமும் கூறுகிறார்.

ரூ.10.75 கோடிக்கு ஏலம்

ரூ.10.75 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் 10.75 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் க்ளென் மாக்ஸ்வெல். கடந்த 2018ல் டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் சொல்லி வைத்தது போல ஐபிஎல்லில் சிறப்பான செயல்பாட்டை இவர் காட்டுவதில்லை.

ஐபிஎல்லில் சொதப்பல்

ஐபிஎல்லில் சொதப்பல்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்திருந்தார் மாக்ஸ்வெல். தன்னுடைய அணியில் விளையாடும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மாக்ஸ்வெல் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பல்வேறு விமர்சனங்கள்

பல்வேறு விமர்சனங்கள்

கடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஓவரில் கூட சுனில் நரேனின் பௌலிங்கில் 14 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் திணறினார் மாக்ஸ்வெல். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர். இதற்கான காரணத்தையும் மாக்ஸ்வெல் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

தெளிவு இல்லை என விளக்கம்

தெளிவு இல்லை என விளக்கம்

ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதையும் ஐபிஎல்லில் விளையாடுவதையும் தான் எப்போதுமே ஒப்பு நோக்கியதில்லை என்று தெரிவித்துள்ளார் மாக்ஸ்வெல். தன்னுடைய அணியில் தன்னுடைய பங்கு மற்றும் சக வீரர்களின் விளையாட்டு ஆகியவை குறித்த தெளிவு தனக்கு உண்டு என்றும் ஆனால் ஐபிஎல்லில் தன்னுடைய இடம் மாறிக்கொண்டே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 20:17 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+