Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லவ் பண்ணதெல்லாம் போதும்.. தமிழ்ப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம்.. பிரபல ஆஸி. கிரிக்கெட் வீரர் அதிரடி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், மெல்போர்னில் வாழ்ந்து வரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

Recommended Video

Glenn Maxwell announces engagement to Vini Raman

ஆஸ்திரேலிய அணியில் ஆல் - ரவுண்டராக வலம் வருபவர் தான் கிளென் மேக்ஸ்வெல்.

அவர் வினி ராமன் என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தார்.

மோதிரம் அணிவித்தார்

இந்த நிலையில், பிப்ரவரி 26 அன்று தன் நீண்ட நாள் காதலி வினி ராமனுக்கு மோதிரம் அணிவித்து அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து பலரும் மேக்ஸ்வெல்லுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

சிறந்த ஆல் - ரவுண்டர்

சிறந்த ஆல் - ரவுண்டர்

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல் - ரவுண்டராக கருதப்படுபவர். ஐபிஎல் தொடரில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. கடந்த 2020 ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல் 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இடையே சில மாதங்கள் அவர் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசிய முதல் கிரிக்கெட் வீரர் என பலராலும் பாராட்டப்பட்டார். பல கிரிக்கெட் வீரர்களும் அவர் பாணியை பின்பற்றி தங்கள் மன அழுத்தத்தை பகிர்ந்து கொண்டனர்.

பிக் பாஷ் லீக்கில் அசத்தல்

பிக் பாஷ் லீக்கில் அசத்தல்

பின்னர் 2020 பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக பதவி ஏற்ற மேக்ஸ்வெல் அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்தார். அந்த தொடரின் சிறந்த கேப்டன் என பலராலும் பாராட்டப்பட்டார்.

திருமணம் செய்ய உள்ளார்

தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கிளென் மேக்ஸ்வெல், தன் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். மேற்கத்திய முறைப்படி அவர் மோதிரம் அணிவித்து வினி ராமனை திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்துள்ளார்.

யார் இந்த வினி ராமன்?

யார் இந்த வினி ராமன்?

வினி ராமன் குடும்பம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டது என கூறப்படுகிறது. வினி ராமன் மெல்போர்ன் நகரில் பிறந்தவர் ஆவார். 1993ஆம் ஆண்டு பிறந்த அவர், மருத்துவ அறிவியல் படித்துள்ளார். மெல்போர்னில் பார்மசிஸ்ட் ஆக இருக்கிறார்.

சந்திப்பு எங்கே?

சந்திப்பு எங்கே?

இருவரும் முதலில் எங்கே சந்தித்துக் கொண்டனர் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் உள்ளன. இருவரும் ஐபிஎல் விருந்தில் சந்தித்துக் கொண்டதாக சிலர் கூறுகின்றனர். வினி ராமன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்தவர் என்பதால், அவர்கள் அங்கேயே சந்தித்துக் கொண்டு இருக்கலாம்.

2017 முதல்..

2017 முதல்..

கடந்த 2017ஆம் ஆண்டு முதன் முதலில் வினி ராமன் தன் சமூக வலைதள பக்கத்தில் கிளென் மேக்ஸ்வெல் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். தொடர்ந்து 2019 ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.

ஐபிஎல்-க்குப் பின்..

ஐபிஎல்-க்குப் பின்..

அப்போதே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், 2020இல் கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் ஆட இருக்கும் அவர், அதன் பின் திருமணம் குறித்து அறிவிக்கலாம்.

Story first published: Wednesday, February 26, 2020, 19:57 [IST]
Other articles published on Feb 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+