சென்னை மாப்பிள்ளையான க்ளென் மேக்ஸ்வெல்.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்
மும்பை: க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட வீடியோ மற்றும் அதற்கு சிஎஸ்கே போட்ட பதிவு இணையத்தை கலக்கி வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வினி ராமன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டே நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட இவர்களின் திருமணம்,
கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

ஆச்சரியம் தந்த மேக்ஸி
இறுதியில் இரு குடும்பத்தாரும் இணைந்து நடப்பாண்டு மார்ச் மாதம் 27ம் தேதியன்று திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர். இதற்காக தமிழில் பத்திரிகையை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர். இந்நிலையில் அவர்களின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கலக்கும் புகைப்படங்கள்
கடந்த மார்ச் 18ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. இதையடுத்து அதிகாரப்பூர்வமாக தான் Mrs. மேக்ஸ்வெல் ஆகியுள்ளதாக வினி ராமன் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் இருக்க கடந்த 27ம் தேதியன்று தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவரும் கணவன் -மனைவி ஆகினர்.

சென்னை மாப்பிள்ளை
இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், தமிழகத்தில் செய்வதை போன்றே வினி ராமன் பட்டு சேலை அணிந்து, முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு வந்தார். இதே போல மேக்ஸ்வெல்லும் கழுத்தில் மாலை, வரவேற்பு நிகழ்ச்சி, மணமக்கள் விளையாட்டு என அசல் தமிழ் பையனாக மாறி கொண்டாடினார்.
சிஎஸ்கேவின் வாழ்த்து
மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்துக் கூறியுள்ளது. ட்விட்டரில் அந்த அணி போட்டுள்ள பதிவில், மேக்ஸ்வெல் சென்னை மாப்பிள்ளை ஆகிவிட்டார்.. திருமண வாழ்த்துகள்.. உங்களது புதிய பார்ட்னர்ஷிப்பில் அதிக மேக்ஸிம்களை பறக்கவிட விசிலடிக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications