Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய மாப்பிள்ளையாகவே மாறி ஆச்சர்யம் அளித்த ஆஸி வீரர்...

சிட்னி : ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் வினி ராமனின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை வினி ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Maxwell engaged with Tamil girl in Indian style

குறைந்த காலகட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், தங்களுடைய நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று வியப்பை ஏற்படுத்திய தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினி ராமன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தங்களது திருமணத்திற்கான டீசர் என்று நிச்சயதார்த்தத்தை வினி ராமன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய மாப்பிள்ளையாகவே மாறியிருந்தார் மாக்ஸ்வெல்.

தமிழ்நாட்டு பெண்ணை மணக்கும் வீரர்

தமிழ்நாட்டு பெண்ணை மணக்கும் வீரர்

ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மாக்ஸ்வெல் தமிழ்நாட்டு பெண் வினி ராமனை மணக்கவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், மோதிர எமோஜியையும் வெளியிட்டிருந்தார். வினி ராமனும் இன்ஸ்டாகிராமில், புகைப்படத்தை வெளியிட்டு, கடந்த வாரத்தில் தன்னுடைய விருப்பத்திற்குரியவர், தன்னை மணக்க கேட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

உதவி புரிந்த வினி ராமன்

உதவி புரிந்த வினி ராமன்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார் மாக்ஸ்வெல். கடுமையான மன நெருக்கடிக்கு தான் ஆளான போது, தான் அதிலிருந்து மீள்வதற்கு வினி ராமன் உதவி புரிந்ததாகவும், மன உளைச்சல் ஏற்பட்டால் யாரிடமாவது பேச வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாக்ஸ்வெல் நன்றி

மாக்ஸ்வெல் நன்றி

மேலும் மன உளைச்சல் காலகட்டத்தில் தான் அதிலிருந்து மீள்வதற்கு வினி உதவியதாகவும், அது அவருக்கு மிக எளிதாக இருக்கவில்லை என்றும் மாக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய தோழி மிகவும் சிறப்பானவர் என்றும் அவர் கூறியுள்ளார். அடிக்கடி மாறும் தன்னுடைய மனதை கையாள அவர் கடுமையான பிரயத்தனங்களை கையாண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புகைப்படம் வெளியிட்ட வினி

புகைப்படம் வெளியிட்ட வினி

இந்நிலையில் வினி ராமன் மற்றும் க்ளென் மாக்ஸ்வெல்லின் நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடைபெற்றது. குறிப்பிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குறுகிய காலகட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆச்சர்யத்தை கொடுத்த அனைவருக்கும் வினி ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஷெர்வானி -குங்குமத்துடன் மிளிர்வு

ஷெர்வானி -குங்குமத்துடன் மிளிர்வு

இந்த நிகழ்ச்சியில் மாக்ஸ்வெல் இந்திய மாப்பிள்ளையாகவே மாறிவிட்டார். பச்சை நிற ஷெர்வானியுடன் நெற்றியில் குங்குமத்துடன் அவர் காணப்பட்டார். வினி ராமனும் லெஹெங்காவுடன் சூப்பராக இருந்தார். இந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டவுடன் ரசிகர்கள், மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

Story first published: Tuesday, March 17, 2020, 15:22 [IST]
Other articles published on Mar 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+