For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே, ஜடேஜாகிட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கத்துக்கணும்... மெக்கிராத் அறிவுரை

சிட்னி : இந்திய வீரர்கள் ரஹானே, ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்கிராத் அறிவுறுத்தியுள்ளார்.

தான் ஜஸ்பிரீத் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் என்றும் மெக்கிராத் குறிப்பிட்டுள்ளார்,

டேவிட் வார்னரை போன்றே ரோகித் சர்மாவும் மிகச்சிறப்பான திறமையையும் அனுபவத்தையும் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. மழையின் குறுக்கீட்டால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது.

மெக்கிராத் அறிவுரை

மெக்கிராத் அறிவுரை

இதனிடையே, முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்கிராத், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய வீரர்கள் அஜிங்க்யா ரஹானே, சுப்மன் கில், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிடித்தமான செயல்பாடு

பிடித்தமான செயல்பாடு

ஜஸ்பிரீத் பும்ராவின் பௌலிங் மிகவும் வியப்பான வகையில் உள்ளதாகவும் தான் பும்ராவின் மிகச்சிறந்த ரசிகன் என்றும் மெக்கிராத் தெரிவித்தள்ளார். தான் அவருடன் சில நேரங்களில் பேசியுள்ளதாகவும், அவர் தனது மனநிலை படி செயல்படுவதாகவும் அது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை

ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் இளம் பௌலர்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்றும் மெக்கிராத் கூறியுள்ளார். புதிய வீரர்கள் நெருக்கடியான சூழலில்தான் அனுபவத்தை கற்க முடியும் என்றும் அத்தகைய சூழலை சிராஜ் உள்ளிட்ட இந்திய பௌலர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Thursday, January 7, 2021, 12:53 [IST]
Other articles published on Jan 7, 2021
English summary
Australian batting line-up have the ability to put the pressure back on bowlers -McGrath
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+