Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பயப்படற மாதிரியெல்லாம் பிட்ச் இல்ல... அது ஒரு காலம்...க்ளென் மெக்கிராத் திட்டவட்டம்

சிட்னி : ஆஸ்திரேலிய பிட்ச்கள் குறித்து இந்திய அணியினர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

தான் விளையாட ஆரம்பித்த 93களில் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு பிட்சும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றும் தற்போது அனைத்தும் ஒரே மாதிரி உள்ளதாகவும் அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரை ஒப்பிட்டால், ஸ்மித் ஒரு படி மேலே தான் இருப்பார் என்றும் அவர் ஸ்டாண்ட் ஆகிவிட்டால் நாம் எதிர்பாராத இடங்களில் எல்லாம் அடித்து ஆடுவார் என்றும் மெக்ராத் கூறியுள்ளார்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

தொடரை கைப்பற்றிய இந்தியா

கடந்த 2018 -19 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் தற்போதைய தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

சுவாரஸ்யமாக இருக்கும்

சுவாரஸ்யமாக இருக்கும்

இதனிடையே, இந்த போட்டி மிகுந்த சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும் என்று அந்நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவான் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியா பகலிரவு போட்டியில் விளையாடியதில்லை என்று சுட்டிக் காட்டிய மெக்ராத், இந்த போட்டியில் பேட்டிங் அல்லது பௌலிங் எதை செய்தாலும் டைமிங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறப்பான வீரர் ரோகித் சர்மா

சிறப்பான வீரர் ரோகித் சர்மா

விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி டெஸ்ட் தொடரின் இடையே நாடு திரும்பவுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக ரோகித் சர்மா விளங்குவார் என்றும் மெக்ராத் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் போதுமான சாதனைகளை ரோகித் வெளிப்படுத்தாத நிலையிலும் அவர் மிகவும் சிறப்பான திறமைவாய்ந்த வீரர் என்றும் மெக்ராத் கூறியுள்ளார்.

அடித்து ஆடுவார்

அடித்து ஆடுவார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி ஆகியோரை ஒப்பிட்டால், ஸ்மித் ஒரு படி மேலே தான் இருப்பார் என்றும் அவர் ஸ்டாண்ட் ஆகிவிட்டால் நாம் எதிர்பாராத இடங்களில் எல்லாம் அடித்து ஆடுவார் என்றும் மெக்ராத் கூறியுள்ளார்.

நெருக்கடியை உணரவில்லை

நெருக்கடியை உணரவில்லை

கடந்த தொடரின்போது சத்தீஸ்வர் புஜாரா சிறப்பாக விளையாடியதாகவும் ரன்களை குவிப்பதில் அவர் நெருக்கடியை உணரவில்லை என்றும் மெக்ராத் கூறினார். தற்போதைய கிரிக்கெட்டில் அவர் தனித்துவமாக விளங்குவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பும்ரா, ஷமி உள்ளிட்ட பௌலர்கள் பந்தை உணர்ந்து செயல்படுவதாகவும் கூறினார்.

ஒரே மாதிரி உள்ளன

ஒரே மாதிரி உள்ளன

மேலும் இந்திய அணியினர் அச்சப்படுவதை போல ஆஸ்திரேலிய பிட்ச்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இல்லை என்றும் அனைத்தும் தற்போது ஒத்ததாகவே உள்ளதாகவும் அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். தான் 93ல் ஆட வந்தபோது, ஒவ்வொரு பிட்சும் ஒவ்வொரு தன்மையுடன் இருந்ததாகவும் அதுதான் ஆஸ்திரேலிய வீரர்களை வலிமையாக வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Story first published: Tuesday, November 17, 2020, 13:23 [IST]
Other articles published on Nov 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+