Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளென் பிலிப்ஸ், ஷாரூக் கான்.. குஜராத் அணி டிக் அடித்த 2 பெயர்கள்.. விழித்துக் கொள்ளுமா சிஎஸ்கே?

மும்பை: குஜராத் அணியில் இருந்து கிளென் பிலிப்ஸ் மற்றும் தமிழக வீரர் ஷாரூக் கான் ஆகிய இருவரையும் விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கிளென் பிலிப்ஸ் மற்றும் ஷாரூக் கான் இருவருமே போதிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் நெஹ்ரா இணைந்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடருக்கான பணிகளை அணி நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. ஏற்கனவே சிஎஸ்கே, டெல்லி அணிகள் பயிற்சியாளர்கள் நியமனங்கள் தீவிரம் ஆர்வம் காட்டி வருகின்றன. மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி திடீரென பயிற்சியாளர்களை மொத்தமாக மாற்றி இருக்கிறது. ஜெயவர்தனே உடனான உறவை மும்பை அணி நிர்வாகம் முறித்து கொண்டுள்ளது.

Glenn Philips

இதற்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதன் மூலமாக அத்தனை ஐபிஎல் அணி நிர்வாகங்களும் மினி ஏலத்திற்கு தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குஜராத் அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் இடையிலான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் பயிற்சியாளர் நெஹ்ரா மற்றும் கேப்டன் சுப்மன் கில்லும் ஆலோசனையை முடித்துள்ளனர்.

இதன் முடிவில் குஜராத் அணி ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் ரீடெய்ன் செய்ய வேண்டிய வீரர்களின் பட்டியலை இறுதி செய்திருக்கிறது. அதன்படி கடந்த சீசனில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தமிழக வீரர் ஷாரூக் கான் மற்றும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் ஆகியோரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது ரூ.4 கோடிக்கு ஷாரூக் கானை குஜராத் அணி நிர்வாகம் ரீடெய்ன் செய்தது. ஆனால் பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் ஷாரூக் கான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. டிஎன்பிஎல் தொடரில் வெளிப்படுத்தும் ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் ஷாரூக் கானால் வெளிப்படுத்த முடியவில்லை.

அதேபோல் ரூதர்போர்ட் இடத்தில் ஆடிய கிளென் பிலிப்ஸ் எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரஷித் கான்,. பட்லர், ரபாடா ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களும் கட்டாயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். இதனால் கிளென் பிலிப்ஸ்க்கு உறுதியாக இடம் கொடுக்க முடியாத நிலையும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 21, 2026, 21:21 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+