ரன் அவுட் பிரச்சினைக்கு தீர்வு வந்தாச்சு.. க்ளென் பிலிப்ஸ் கண்டுபிடித்த டெக்னிக்..நல்ல பலன் இருக்கே
சிட்னி: மன்கட் பிரச்சினையை சரி செய்வதற்காக நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் செய்த விஷயம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடந்தின. சிட்னியில் உள்ள சர்வதேச மைதானத்தில் இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது.
குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியான இதில் இலங்கை அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

வினோத சம்பவம்
இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக மன்கட் முறை ( ரன் அவுட் ) விக்கெட்கள் கிரிக்கெட்டின் ஆன்மாவை கெடுக்கிறது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு காரணம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அந்த முறையில் ரன் அவுட் செய்தது தான்.

பிலிப்ஸ் தந்த தீர்வு
இதற்கு தான் க்ளென் பிலிப்ஸ் தீர்வு கண்டுபிடித்துள்ளார். இலங்கையுடனான போட்டியில் கடைசி ஓவரில் நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் தான் அவர் நின்றிருந்தார். அப்போது அவர் ஓட்டப்பந்தயத்தில் வீரர்கள் எப்படி நிற்பார்களோ அதே போன்று குணிந்து நின்றுக்கொண்டிருந்தார். அவரின் பேட் முழுவதுமாக கிறீஸுக்கு வெளியே இருந்தது. இது போன்று நிற்பதில் ஒரு பலன் உள்ளது.

பலன் என்ன?
இப்படி வலைந்து நிற்பதன் மூலம் எடுத்த உடனேயே மிகவும் வேகமாக ஓடிட முடியும். இதுமட்டுமல்லாமல், உடல் முழுவதும் வெளியே இருக்கும், பேட்டும் கிறீஸுக்கு வெளியே இருக்கும். ஆனால் பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆக மாட்டார். இதனை இனி அனைத்து பேட்ஸ்மேன்கள் பின்பற்றலாம் என வல்லுநர்கள் ஆலோசனைக்கூறி வருகின்றனர்.

அட்டகாச சதம்
க்ளென் பிலிப்ஸ் இந்த விஷயத்தால் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் வியக்க வைத்தார். நியூசிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, தனி ஆளாக போராடிய க்ளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ரன்களை அடித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.


Click it and Unblock the Notifications