Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நியூசிலாந்து வீரர்... டபுள் செஞ்சுரியும் கூட!

லன்டண்: இங்கிலாந்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

Glenn Phillips: New Zealand teenager hits 6 sixes in an over for MCC

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் வளர்ந்தவரான கிளென் பிலிப்ஸ் (19). இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்துள்ளார்.

வலது கை ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அவர், டியூக் ஆ நோர்போல்ச் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 123 பந்தில் 201 ரன்கள் குவித்தார்.

அண்மையில் வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். மேலும் ஆக்லாந்து அணிக்காக அவர் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 26, 2016, 14:26 [IST]
Other articles published on May 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+