Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சொல்றீங்க.. அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம்.. தொடர் நாயகன் விருது வென்ற வெ.இ வீரருக்கு ஜாக்பாட்!

கனடா: குளோபல் டி20 லீக் தொடரில் தொடர்நாயகன் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரூதர்போர்ட்-க்கு பரிசாகா அமெரிக்காவில் அரை ஏக்கம் நிலம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக கிரிக்கெட் பக்கமே திரும்பாத அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் டி20 மற்றும் டி10 லீக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கனடாவில் குளோபல் டி20 லீக் போட்டிகள் பிரபலமாகி வருகிறது.

Global T20 League given the half acre land in USA to Sherfane Rutherford for the Player of the Series

இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சர்ரே ஜாக்குவார்ஸ் அணியை எதிர்த்து மான்ட்ரிய டைகர்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சர்ரே ஜாக்குவார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஜத்திந்தர் சிங் 57 பந்துகளில் 56 ரன்களும், அயான் கான் 15 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய மான்ட்ரியல் டைகர்ஸ் அணி 12 ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரூதர்போர்ட் - திபேந்திர சிங் கூட்டணி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் திபேந்திர சிங் 16 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் களம் புகுந்த ஆன்ட்ரே ரஸல் 6 பந்துகளில் 20 ரன்கள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

சிறப்பாக ஆடிய ரூத்ர்போர்ட் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். குளோபல் டி20 தொடரை மான்ட்ரியல் அணி வென்றதை விடவும், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ரூதர்போர்ட்-க்கு அளிக்கப்பட்ட பரிசுதான் கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை வெல்லும் வீரர்களுக்கு பரிசாக ஊக்கத்தொகை தான் வழங்கப்படும். ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வெல்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், தொடர் நாயகன் விருது வெல்பவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும். ஆனால் குளோபல் டி20 லீக் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ரூதர்போர்ட்-க்கு அமெரிக்காவில் அரை ஏக்கம் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, August 8, 2023, 6:00 [IST]
Other articles published on Aug 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+