Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 சிக்ஸ்.. மின்னல் அரைசதம்.. மெர்சல் காட்டிய யுவராஜ் சிங்.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

Recommended Video

Yuvraj Singh fastest 50 in Global T 20 | 5 சிக்ஸ்.. மின்னல் அரைசதம்! மெர்சல் காட்டிய யுவராஜ் சிங்

பிராம்ப்டன் : யுவராஜ் சிங் வயதானாலும் கனடாவில் நடந்து வரும் குளோபல் டி20 தொடரில் இன்னும் மாறாத அதே வேகத்தில் ரன் குவித்து மிரட்டினார்.

கனடாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான குளோபல் டி20 யில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார் யுவராஜ் சிங். இந்த அணி பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணியை சந்தித்தது.

வெளுத்துக் கட்டிய பிராம்ப்டன்

வெளுத்துக் கட்டிய பிராம்ப்டன்

முதலில் பேட்டிங் செய்த பிராம்ப்டன் அணி அதிரடியாக ரன் குவித்தது. முன்சே 36 பந்துகளில் 66 ரன்களும், பாபர் ஹயாத் 18 பந்துகளில் 48 ரன்களும் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் 222 ரன்களை குவித்தது.

பந்து வீசிய யுவராஜ் சிங்

பந்து வீசிய யுவராஜ் சிங்

டொரண்டோ அணியில் யார் பந்து வீசினாலும் வெளுத்து பிராம்ப்டன். அப்போது வேறு வழியின்றி கேப்டன் யுவராஜ் சிங் 2 ஓவர்கள் பந்து வீசினார். சிறப்பாக பந்து வீசிய யுவராஜ் 2 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்த நிலையில், யுவராஜ் சிங் மற்றும் சல்மான் மட்டுமே குறைவாக ரன்கள் கொடுத்தனர்.

டொரண்டோ தடுமாற்றம்

டொரண்டோ தடுமாற்றம்

223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய டொரண்டோ அணியில் அனைவரும் அதிரடியாக பேட்டிங் செய்தனர். ஆனால், அதன் விளைவாக விக்கெட்களும் வேகமாக வீழ்ந்தது. 75 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் பேட்டிங் செய்யத் துவங்கினார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் மின்னல் வேகம்

யுவராஜ் சிங் மின்னல் வேகம்

அதிரடியாக ரன் குவித்த யுவராஜ் சிங் சிக்ஸர், ஃபோர் என ஒவ்வொரு ஓவரிலும் ரன் குவித்த வண்ணம் இருந்தார். 21 பந்துகளில் அரைசதம் கடந்து இந்திய ரசிகர்களுக்கு பழைய ஞாபகங்களை கிளறி விட்டார்.

5 சிக்ஸ் அடித்தார்

5 சிக்ஸ் அடித்தார்

தன் மின்னல் வேக ரன் குவிப்பபில் 5 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட்டார் யுவராஜ் சிங். 16வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்து, மூன்றாவது பந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்ற யுவராஜ், கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டொரண்டோ தோல்வி

டொரண்டோ தோல்வி

யுவராஜ் சிங் இருக்கும் வரை பிராம்ப்டன் அணி பரபரப்பாக இருந்தது. அவர் ஆட்டமிழந்து சென்ற உடன் நிம்மதி அடைந்த அந்த அணி, சமாளித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் வயதனாலும் அதே பழைய யுவராஜாக மின்னல் வேகத்தில் ரன் குவித்ததை கண்ட இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர்.

Story first published: Sunday, August 4, 2019, 14:02 [IST]
Other articles published on Aug 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+