Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GOAT Trailer - சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றிய வெங்கட் பிரபு.. டிரைலரில் வந்ததே சேப்பாக்கம் மைதானம் அல்ல

சென்னை : தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் டிரைலர் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Science Fiction திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பாக பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாக டிரைலரில் வசனம் இடம்பெற்றுள்ளது.

GOAT Trailer Vijay csk cricket

மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தாக்குதல் நடப்பது போலவும், அதனை விஜய் தடுக்க சண்டை போடுவதாகவும் டிரைலர் காட்சியில் இடம்பெற்றுள்ளது. அதில், நடிகர் விஜய் , தோனியின் Definitely not என்ற வார்த்தை அடங்கிய டிசர்ட்டை அணிந்து மைதானத்தில் வருகிறார்

இதனால், சேப்பாக்கம் மைதானத்தில் சண்டை காட்சிகள் நடப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டிரைலரில் இடம்பெற்றுள்ளது, சேப்பாக்கம் மைதானம் கிடையாது என்றும் , திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பில்ட் கிரிக்கெட் மைதானம் தான் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

GOAT Trailer Vijay csk cricket

ஆனால், மைதானத்தின் வெள்ளை நிற குடைபோல் மேல்கூரை இருப்பதால், அதனை சேப்பாக்கம் மைதானம் என்று ரசிகர்கள் நினைத்து கொண்டனர். இதனால், திருவனந்தபுரம் மைதானத்தை காட்டி சேப்பாக்கம் மைதானம் என்று படக்குழு ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியானது.

GOAT Trailer Vijay csk cricket

சென்னையில் கதை நடக்கும் போது, அதனை ஏன் திருவனந்தபுரத்தில் உளள மைதானத்தை காட்ட வேண்டும். கிராப்கிசில் சேப்பாக்கம் மைதானத்தை காட்டி இருக்கலாமே என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, கோட் திரைப்படத்தில் தோனி ஒரு காட்சியில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Sunday, August 18, 2024, 12:07 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+