Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: கடவுள் நம்ம பக்கம் இருக்கான் குமாரு... கவலைப்படாத..! வீடியோ வெளியிட்ட பயிற்சியாளர்

Recommended Video

WORLD CUP 2019 | கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார்: ரவி சாஸ்திரி நம்பிக்கை- வீடியோ

லண்டன்: இறுதி போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார்.

நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டி, மான் செஸ்டரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது.

இந்திய அணியின் பவுலிங்கால் மிரண்ட நியூசிலாந்து, விக்கெட்டுகளையும், இழந்து ரன்களை எடுக்கவும் திணறியது. ஸ்கோர் 46.1 ஓவரில் 211/5 என்று இருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ரிசர்வ் டேயில் ஆட்டம்

ரிசர்வ் டேயில் ஆட்டம்

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்புகள் இல்லை என நடுவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஆட்டம் நிறுத்தப்பட்டு, ரிசர்வ் டே என்று அறிவிக்கப்பட்ட இன்றைய தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஓய்வறையில் கடவுள்

ஓய்வறையில் கடவுள்

மதியம் 3 மணி அளவில் விட்ட இடத்தில் இருந்து ஆட்டம் தொடங்கும். போட்டிக்கு முன்னதாக, ஐசிசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். பைனலில் இங்கிலாந்துடன் ஒருவேளை இந்தியா மோதினால் கடவுள் நமது ஓய்வறையில் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா ஓய்வறை

அவர் மேலும் கூறியிருப்பதாவது: லீக் போட்டியில் இங்கிலாந்துடன் இந்தியா சந்தித்த போது, கடவுள் இங்கிலாந்தின் ஓய்வறையில் அமர்ந்து இருந்தார் என்று நினைக்கிறேன். ஒருவேளை இங்கிலாந்தை பைனலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கடவுள் எங்கள் ஓய்வறையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் சதம் சிறந்த ஒன்று. காரணம் அது பிட்ச் கடினமான ஒன்று. எனவே, என்னை பொறுத்த வரை, ரோகித்தின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் என்று கூறலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஷமியின் ஹாட்ரிக் சாதனை அற்புதம். முகமது ஷமி சிறந்த வீரர் என்றார்.

Story first published: Wednesday, July 10, 2019, 9:40 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+