Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோல்டன் டக்கில் இஷான் கிஷண், ரோஹித் சர்மா புதிய சாதனை!

Recommended Video

கோல்டன் டக்கில் மும்பை செய்த புதிய சாதனை

பெங்களுரு: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் இந்த சீசனில் மும்பையின் இஷான் கிஷண் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக கோல்டன் டக் அவுட்டாயினர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 31வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

Golden duck out for Rohit and Ishan

முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை முதல் ஓவரிலேயே இஷான் கிஷணை இழந்தது.

இந்த சீசனில் அவர் மூன்று முறை ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகியுள்ளார். அதில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே அவுட்டாகி, கோல்டன் டக் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவும் கோல்டன் டக் அவுட்டானார். இந்த சீசனில் இரண்டாவது முறையாகவும், இதுவரை 9 முறையும் அவர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.

இந்த சீசனில், மும்பை அணியைச் சேர்ந்த 12 பேர் டக்அவுட்டாகி, புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அதில் 8 பேர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்தான் மிகவும் குறைந்தபட்சமாக, 2 பேர் டக் அவுட்டாகியுள்ளனர்.

Story first published: Tuesday, May 1, 2018, 23:11 [IST]
Other articles published on May 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+