Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு காலத்துல நல்ல பௌலருக்காக இந்தியா சிரமப்பட்டுச்சு... இப்போ நிலைமை அப்படி இல்ல

கேப் டவுன் : இந்தியாவில் பௌலிங் தற்போது நல்ல பார்மில் உள்ளதாக முன்னாள் தென்னாப்பிரிக்க பௌலர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேச பிரசாத் ஆகியோருக்கு மாற்று இல்லாமல் இந்திய அணி மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, இந்திய பௌலிங்கில் சமநிலை காணப்படுவதாகவும், சில உயரமான வீரர்கள் மற்றும் சில உயரம் குறைந்த பௌலர்கள் அணியில் காணப்படுவதால் சமநிலை பாதுகாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷான் பொல்லாக் கருத்து

ஷான் பொல்லாக் கருத்து

இந்தியாவில் தற்போது சிறப்பான தரமான பௌலர்கள் உள்ளதாகவும், அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் முன்னாள் தென்னாப்பிரிக்க பௌலர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். சோனியின் 10 பிட் ஷாப் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் திறமையான மற்றும் நல்ல ஷேப்பில் உள்ள பௌலர்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாற்று பௌலர்கள் இல்லாமல் சிரமம்

மாற்று பௌலர்கள் இல்லாமல் சிரமம்

தென்னாப்பிரிக்க அணிக்காக 421 டெஸ்ட் போட்டிகள், 393 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள பொல்லாக், கடந்த ஆண்டுகளில் இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேச பிரசாத் ஆகிய பௌலர்களுக்கு மாற்றாகவும் ஆதரவாகவும் செயல்பட, வேறு எந்த பௌலர்களும் இல்லாத நிலை காணப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அணியின் தரம் குறைந்திருந்தது

அணியின் தரம் குறைந்திருந்தது

ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேச பிரசாத் ஆகிய இரு வீரர்களுக்கு பிறகு அவர்களின் தரத்தில் எந்த பௌலர்களும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வில்லை என்றும், அதனாலேயே இந்திய அணியின் தரம் குறைந்து காணப்பட்டதாகவும் பொல்லாக் மேலும் கூறினார். ஆனால் தற்போது உலக தரத்தில் ஜஸ்பிரீத் பும்ரா, மற்றும் அவரின் கீழ் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பௌலர்கள்

சிறப்பான பௌலர்கள்

மேலும் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் மற்றும் நவ்தீப் ஷைனி போன்ற பௌலர்களும் இந்திய அணியின் தரமான பௌலர்களாக விளங்குவதாகவும் பொல்லாக் தெரிவித்துள்ளார். அணியில் உயரமான பௌலர்கள் மற்றும் உயரம் குறைந்த பௌலர்கள் காணப்படுவதால் நடுநிலையாகவும், திறமையுடனும் இவர்கள் இந்திய வேகப்பந்து வீச்சின் அனைத்து நிலைகளையும் சிறப்பாக சமாளிப்பதாகவும் கூறியுள்ளார்.

தயாராக இருக்கும் பௌலர்கள்

தயாராக இருக்கும் பௌலர்கள்

சமீபத்தில் பொல்லாக்குடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜஸ்பிரீத் பும்ரா, இந்தியாவின் பௌலிங்கில் தற்போது நல்ல சூழல் காணப்படுவதாகவும், அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்திருந்தார். ஒரு பௌலர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், அவ்வாறு இல்லையென்றால் அவரது இடத்தை நிரப்ப மற்றொரு பௌலர் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

Story first published: Monday, June 15, 2020, 13:48 [IST]
Other articles published on Jun 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+