Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு நற்செய்தி.. முழு வீச்சில் தயாராகும் பும்ரா, ஹர்ஷல் பட்டேல்.. எப்போது விளையாடுவார்கள்?

மும்பை: இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் விஷயத்தில் நற்செய்தி கிடைத்துள்ளது.

Recommended Video

IND vs ZIM தொடரில் Washington Sundar ஆடுவது சந்தேகம்? *Cricket | Oneindia Tamil

ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இடம்பெறாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

பும்ரா விலகல்

பும்ரா விலகல்

கடந்த ஒரு வருட காலமாக இந்திய அணியின் பவுலிங் ஜோடியாக இவர்கள் இருவர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தனர். பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் ஹர்ஷல் பட்டேலுக்கு காலில் ஏற்பட்ட பிரச்சினையால் இருவரும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினர். இவர்களுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. பும்ரா, ஹர்ஷலுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால் இருவரும் அதற்குள் தயாராவது கடினம் என்றும், அதிலும் மாற்று வீரர்கள் தான் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நற்செய்தி கிடைத்துள்ளது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

அவர்கள் இருவரும் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடாமியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்று காலை முதல் தங்களது வலைபயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இருவருமே தங்களது முழு வேகத்தை பயன்படுத்தி பவுலிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு தயார்படுத்த பிசிசிஐ-ல் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆசிய கோப்பை தொடரை முடிக்கும் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தொடரில் பும்ரா மற்றும் ஹர்ஷல் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, August 24, 2022, 10:02 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+