For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகம்மது ஷமி பிறந்தநாள் எப்ப? உடனே கூகுள்ள தேடாதீங்க...கூகுளே குழம்பிப் போய்தான் இருக்கு

லண்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி நேற்று செப்டம்பர் மூன்றாம் தேதி பிறந்த நாள் கொண்டாடி உள்ளார். நிறைய பேருக்கு அவரின் பிறந்த நாள் நேற்றுதான் என தெரியவில்லை. அதற்கு காரணம் கூகுள் செய்த குழப்பம் தான்.

Google Creates confusion over Muhammed shami birthday

இந்தியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை இழந்து இருந்தாலும், ஒரு சிறிய உற்சாகமாக நேற்று ஷமியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாள் செய்தி ஷமி போட்ட ட்வீட் மற்றும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி ஐசிசி மற்றும் பிசிசிஐ போட்ட ட்வீட் மூலமாகத்தான் பல ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அதன்பின், எப்படி நாம் மறந்தோம் என சில ரசிகர்கள் கூகுள் தளத்தில் அவரது பிறந்த நாள் பற்றி தேடி இருக்கிறார்கள். கூகுளில் முகம்மது ஷமியின் பிறந்த நாள் மார்ச் 9 என இருக்கிறது. ஆனால், அவரது பிறந்த நாள் செப்டம்பர் 3 ஆகும்.

எனினும், விக்கிபீடியாவில் அவர் பிறந்த நாள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழப்பம் ஏன் வந்தது என பார்த்தால், அமெரிக்க முறையில் தேதியை எழுதும் போது மாதம் முதலிலும், நாள் அடுத்தும் எழுதப்படும். செப்டம்பர் 3 என்ற தேதியை (03-09-1990), மார்ச் 9, 1990 என சில இணையதளங்கள் தவறாக எடுத்து பதிவிட்டுள்ளன. அந்த இணையதள விவரங்களை கூகுள் அப்படியே தன் தேடுதல் பக்கத்தில் போட்டு இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, September 4, 2018, 15:40 [IST]
Other articles published on Sep 4, 2018
English summary
Google Creates confusion over Muhammed shami birthday. March 9 or September 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+