Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிடையர் ஆன பின்னர் சச்சினுக்கு பாரத ரத்னா தருவோம்.. சொல்கிறார் ராஜீவ் சுக்லா

டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சச்சின் டெண்டுல்கரின் பெயர், பாரத ரத்னா விருதுக்குப் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியும், கிரிக்கெட் நிர்வாகியுமான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இதன் மூலம் பாரத ரத்னா விருதை சச்சினுக்குத் தருவதற்கான சரியான சந்தர்ப்பத்தை காங்கிரஸும், மத்திய அரசும், கிரிக்கெட் நிர்வாகிகளும் பார்த்துக் காத்திருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு எம்.பி பதவி தரலாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பரிந்துரை செய்தார் என்றும் சுக்லா தெரிவித்துள்ளார்.

சுக்லாவின் பேட்டியிலிருந்து சில...

சோனியாதான் காரணம்

சோனியாதான் காரணம்

ராஜ்யசபா எம்.பி பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை வந்தபோது விளையாட்டுத் துறையில் பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. இருப்பினும் சோனியா காந்திதான், சச்சின் டெண்டுல்கர் பெயரைப் பரிந்துரைத்தார்.

நான் காரணமல்ல

நான் காரணமல்ல

உண்மையில் சச்சின் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை. நான் கவாஸ்கர் உள்ளிட்டவர்களைத்தான் நினைத்திருந்தேன். ஆனால் சோனியாதான் சச்சின் பெயரை முன்மொழிந்தார். சச்சினுடன் பேசுமாறும் என்னைக் கேட்டுக் கொண்டார்.

பிடிவாதமாக இருந்தார்

பிடிவாதமாக இருந்தார்

அதற்கு நான், சச்சின் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறாரே என்று கேட்டபோது இல்லை, இல்லை சச்சின்தான் சரியான நபர். அவருடன் பேசுங்கள் என்று விடாப்பிடியாக கேட்டுக் கொண்டார். முதலில் பேசுங்கள், பிறகு பார்க்கலாம் என்றும் கூறினார்.

டாக்காவில் விளையாடியபோது

டாக்காவில் விளையாடியபோது

இதையடுத்து அப்போது டாக்காவில் போட்டியில் கலந்து கொண்டிருந்த சச்சினுடன் நான் பேசினேன். தனது குடும்பத்தினருடன் கலந்து பேசி சொல்வதாக கூறினார் சச்சின். பின்னர் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டார். இப்படித்தான் சச்சின் எம்.பியானார் என்றார் சுக்லா.

2012 முதல் எம்.பி

2012 முதல் எம்.பி

கடந்த 2012ம் ஆண்டு எம்.பி பதவிக்கு வந்தார் சச்சின். விளையாட்டில் தீவிரமாக இருக்கும்போதே எம்.பியான முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.

அடுத்து பாரத ரத்னா...

அடுத்து பாரத ரத்னா...

சுக்லா மேலும் கூறுகையில், சச்சினுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கண்டிப்பாக இதை அரசு பரிசீலிக்கும். ஆனால் இப்போது அல்ல. சச்சின் ஓய்வு பெற்ற பிறகு இது பரிசீலிக்கப்படும். தற்போது சச்சின் விளையாடி வருகிறார். இப்போது கொடுத்தால் சர்ச்சை கிளப்புவார்கள். எனவே அவர் ஓய்வு பெற்ற பிறகு இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்றார் சுக்லா.

Story first published: Wednesday, November 13, 2013, 9:10 [IST]
Other articles published on Nov 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+