Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி நீண்ட நாட்கள் கேப்டனாக இருக்க மாட்டார்.. கணிக்கும் முன்னாள் வீரர்!

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. இந்திய அணி இந்த தொடரில் மிக மோசமாக விளையாடிக் கொண்டு இருக்கிறது.

முக்கியமாக இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் பலரும் இந்திய அணி மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

இந்திய கேப்டன் கோஹ்லி மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோஹ்லி எதிர்காலத்தில் கேப்டனாக இருக்க மாட்டார் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் குறிப்பிட்டு குறிக்கிறார்.

தோல்வி

தோல்வி

கோஹ்லி கேப்டனாக ஆன பின் இந்தியா முதல் தொடரில் தோல்வி அடைந்து இருக்கிறது. கேப்டவுனில் நடத்த முதல் தென்னாப்பிரிக்க டெஸ்டிலும், நியூலாண்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் 2-0 என தொடரை இழந்துள்ளது.

கோஹ்லி கோபம்

கோஹ்லி கோபம்

தொடர் தோல்வி காரணமாக கோஹ்லி மிகவும் விரக்தியில் உள்ளார். அவர் பத்திரிக்கையாளர் பேட்டியின் போது கோபமாக பேசினார். ஒரு பத்திரிக்கையாளரிடம் சண்டைக்கு சென்றார். வெளிநாட்டில் இந்திய அணி தோற்பது குறித்து பதில் அளிக்க மறுத்தார்.

ஆருடம்

ஆருடம்

தற்போது கோஹ்லி குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் கிரேன் ஸ்மித் பேசியுள்ளார். அதில் ''கோஹ்லி எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருக்க மாட்டார். அவரின் செயல்பாட்டை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. இந்திய அணிக்கு அவரைவிட சிறந்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சரியில்லை

சரியில்லை

மேலும் கோஹ்லியின் அணி தேர்வு முறை சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கோஹ்லி இந்த போட்டியிலும் மோசமாக அணியை தேர்வு செய்துள்ளார். இரண்டு போட்டிகளில் நன்றாக பந்து வீசி, மற்ற வீரர்களை விட சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வினை அணியில் இருந்து நீக்கி உள்ளார். மேலும் ஸ்பின் பவுலர் இல்லாமல் அணி களம் இறங்கி உள்ளது.

Story first published: Wednesday, January 24, 2018, 16:46 [IST]
Other articles published on Jan 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+