டி20 உலககோப்பையில் இந்த இந்திய வீரர் சதம் அடிப்பார்.. இல்லைன்னா டிஆர்பி குறைஞ்சிடும்.. ஸ்வான் பேச்சு
மும்பை : டி20 உலக கோப்பையில் இந்திய அணி செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தான் டிவி நிறுவனம் ஒன்றில் வர்ணனையாளராக செயல்பட்டதாக குறிப்பிட்டார்.
அப்போது இந்திய அணி கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் போது இரண்டு வீரர்கள் நன்றாக ர ன்குவித்தால் அன்றைய ஆட்டத்தின் டிஆர்பி அதிகமாக இருக்கும் என்பதை தாம் அறிந்ததாக ஸ்வான் கூறினார் .

டிஆர்பி சரியும்
இது குறித்து பேசிய அவர் விராட் கோலி, தோனி ஆகியோருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அன்றைய ஆட்டத்தின் டிஆர்பி அதிகமாக இருக்கும். ஒருவேளை அவர்கள் சொதப்பினால் அன்றைய ஆட்டத்தின் டிஆர்பி சரிவை நோக்கி செல்லும்.இதை நான் தொலைக்காட்சியில் பணிபுரியும் போது கவனித்து இருக்கிறேன் என்று ஸ்வான் கூறினார்.

சதம் அடிப்பார்
ரோகித் குறித்து பாராட்டிய ஸ்வான் , டி20 உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா சதம் அடிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். ரோகித் சர்மா குறித்து தமக்கு எந்த கவலையும் இல்லை. எந்த சந்தேகமும் இல்லை.இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா தான் சிறப்பான நபராக இருப்பார். ரோகித் சர்மா தற்போது சிறந்த பார்மில் இல்லையென்றாலும் இந்திய அணி போட்டிகளில் விளையாடும் போது பெரிய ஸ்கோர்களை அடிக்கிறது.

கோலி மீது நம்பிக்கை
விராட் கோலி பேட்டிங் செய்யும்போது ரன்களை அடிக்கவில்லை என பலரும் கூறுகின்றனர்.விராட் கேப்டனாக இருந்தது யாருமே கவனிக்கவில்லை. தற்போது சாதாரண வீரராக அணிக்கு விராட் கோலி விளையாடுகிறார். இதனால் எந்த அழுத்தமும் இல்லாமல் விராட் கோலி சிறப்பாக ரன் சேர்ப்பார் என நான் நம்புகிறேன்.

உலககோப்பையை வெல்லலாம்
விராட் கோலி அதிரடியாக விளையாடினால் டி20 உலககோப்பையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஸ்வான் கூறினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித், விராட் கோலி என இரண்டு வீரருமே சிறப்பாக விளையாடவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர்கள் ரன் குவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications