Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவிகளா ஒரே ஆபாசமா இருக்கு.. பெற்றோர்களே உஷார்.. GTA 6 வீடியோகேம் சிறுவர்களுக்கு இல்லை

சென்னை : வீடியோ கேம் விரும்பிகளால் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட "கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6" (GTA 6) வீடியோ கேமின் ட்ரைலர் வெளியாகி அவர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

ஆனால், இந்த வீடியோ கேம் சிறுவர்களுக்கானது அல்ல. ட்ரைலரிலேயே அதிக ஆபாச காட்சிகளை கொண்டுள்ளது. ஆனாலும், சிறுவர்களே இதன் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜிடிஏ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வீடியோ கேம் தான் 2018 வரை உலகிலேயே அதிக லாபம் ஈட்டிய, அதிகம் விற்பனையான வீடியோ கேம். இந்த கேமில், கார்களை திருடுவது, ரௌடிகளுடன் சண்டை போடுவது, மக்களை அடிப்பது, துப்பாக்கியால் சுடுவது என எந்த வரையறையும் இல்லாமல் அதிரடி ஆக்ஷன் சம்பவங்கள் இடம் பெறும். அது மட்டுமின்றி பல சமயம் பிகினி ஆடைகளுடன், அரை நிர்வாணத்தில் பலர் சுற்றித் திரிவது போன்ற காட்சிகள் இருக்கும்.

Grand Theft Auto 6 Trailer : GTA 6 Video game is not for teens

ஜிடிஏ 5-விலேயே ஆபாசக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள், வெறுப்பை விதைக்கும் காட்சிகள் அதிகம் என்ற புகார் உண்டு. அதனாலேயே, டீனேஜ் சிறுவர்கள், இளைஞர்கள் தான் இந்த வீடியோ கேமை அதிகம் விரும்பி ஆடி வந்தனர். தற்போது ஜிடிஏ 6-இல் ஆபாசக் காட்சிகள் கண்டேமேனிக்கு இடம் பெற்றுள்ளன. ட்ரைலரிலேயே இப்படி என்றால் வீடியோ கேமில் இன்னும் என்ன இருக்குமோ.. ஆனால், இப்போதே இளைஞர்கள் வீடியோ கேம் வெளியாகும் நாளை எண்ணி காத்திருக்கின்றனர்.

இந்த வீடியோ கேம் நிச்சயம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கானது அல்ல. குறைந்தபட்சம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வீடியோ கேம் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பெற்றோர்கள் இந்த வீடியோ கேம் குறித்து விழிப்போடு இருப்பது நல்லது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் ஜிடிஏ 5 வெளியாகி வீடியோ கேம் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறை ஜிடிஏ 6-ம் நிச்சயம் அதிக அளவில் விற்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது சிறுவர், சிறுமியர் கையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Story first published: Tuesday, December 5, 2023, 17:58 [IST]
Other articles published on Dec 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+