For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்தின் செமி பைனல் ஹீரோ, எலியட்டுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடம்!

By Veera Kumar

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து, நியூசிலாந்தின் ஹீரோவாக உருமாறிய கிரான்ட் எலியட், உலக கோப்பைக்காக தனது செல்ல தங்கை திருமணத்தை மிஸ் செய்யப்போகிறாராம். ஆனால் தங்கையை கோபப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள எலியட், ஹனிமூனுக்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்களித்துள்ளார்.

உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில், 84 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார் நியூசிலாந்தின் கிரான்ட் எலியட்.

தென் ஆப்பிரிக்க மண்ணின் மகன்

தென் ஆப்பிரிக்க மண்ணின் மகன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்தான் எலியட் சொந்த ஊர். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிலவும் இட ஒதுக்கீடு முறை காரணமா, அங்கு ஆட வாய்ப்பு கிடைக்காமல், நியூசிலாந்துக்கு சென்றார் எலியட். இருப்பினும், அவரது பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தார் ஜோகனஸ்பர்க்கில்தான் வசிக்கின்றன்.

ஆறு மாசம் ஆச்சு..

ஆறு மாசம் ஆச்சு..

இதில், இளைய சகோதரி கேட் எலியட்டுக்கு நாளை, மார்ச் 28ம்தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. இந்த தேதி 6 மாதங்கள் முன்பே இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், நியூசிலாந்து உலக கோப்பை அணியில் தனக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதிய கிரான்ட் எலியட், அந்த திருமண தேதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அண்ணனின் ஆட்டம் அபாரம்

அண்ணனின் ஆட்டம் அபாரம்

இந்நிலையில், நியூசிலாந்து உலக கோப்பை அணியில் இடம் கிடைத்து, அரையிறுதியில் ஹீரோவாகவும் மாறிவிட்ட கிரான்ட் எலியட்டுக்கு, தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எலியட் தங்கை கேட் கூறுகையில், "எனது அண்ணன் உலக கோப்பை அணியில் இடம் பெற்றதையும், அரையிறுதியில் அவரது ஆட்டத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை, பைனல் போட்டியை, பெரிய திரை அமைத்து பார்க்க உள்ளோம்" என்றார்.

தங்கைக்கு பரிசு

தங்கைக்கு பரிசு

கிரான்ட் எலியட் கூறுகையில், "எனது தங்கை திருமணத்தில் பங்கேற்க முடியாதது வருத்தம்தான். ஆனால், உலக கோப்பை முடிந்து ஊர் திரும்பும்போது, தங்கைக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். அவரது ஹனிமூன் செலவு முழுவதையும் நானே ஏற்கப்போகிறேன். தங்கையும், மைத்துனரும், எங்கு ஹனிமூன் செல்ல ஆசைப்பட்டாலும், அதற்கு நான் ஏற்பாடு செய்வேன்" என்றார்.

பணம் சேர்த்துவிட்டார்

பணம் சேர்த்துவிட்டார்

அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருது மூலம் கிடைத்த பரிசு தொகை மற்றும் உலக கோப்பையை வெல்லும் அல்லது, 2வதாக வரும் அணிக்கு கிடைக்கும் பரிசு தொகை பங்கு போன்றவற்றின் மூலம், தங்கையின் ஆசையை நிறைவேற்றி வைக்கப்போகிறாராம், இந்த பாசக்கார அண்ணன். இந்த நேரத்தில் இணையத்தில் படித்த ரசிகரின் கமெண்ட் ஒன்று நினைவுக்கு வருகிறது. "உலக கோப்பை பைனலுக்குள் போகப்போகும் முதல் தென் ஆப்பிரிக்கர் எலியட்தான், ஆனால் நியூசிலாந்து வழியாக"

Story first published: Friday, March 27, 2015, 16:26 [IST]
Other articles published on Mar 27, 2015
English summary
If New Zealand win their maiden World Cup on Sunday, it will probably be the biggest wedding gift that Grant Elliott can give his sister.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+