
தடுமாற்றம்
தொடக்கம் முதலே கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ரோகித் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 8 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் போல்ட் ஆனார்.இரட்டை சதம் அடித்த பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பிய இஷான் கிஷன் 5 ரன்களில் வெளியேறினார்.

சுப்மான் கில் 208
ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 88 பந்துகளில் சுப்மான் கில் சதம் விளாசினார். ஹர்திக் பாண்டியா முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் தனி ஆளாக நின்ற சுப்மான் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இதில் 19 பவுண்டரிகளையும், 9 சிக்சர்களையும் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

சரிந்த விக்கெட்
350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் பெரிய தாககத்தை ஏற்படுத்தவில்லை. கான்வே 10 ரன்களிலும், நிக்கோலஸ் 18 ரன்களிலும், டேரில் மிட்செல் 9 ரன்களிலும் முக்கிய கட்டத்தில் வெளியேறினர். கேப்டன் டாம் லாத்தம் 24 ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

57 பந்துகளில் சதம்
இதனையடுத்து, மைக்கேல் பிராஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்டனர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். வெற்றி நம்ம பக்கம் தான் என்று நினைத்து கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக வீசும் பந்தை எல்லாம் மைக்கேல் பிராஸ்வெல் சிக்சருக்கு விரட்ட 57 பந்துகளில் 100 ரன்கள் கடந்தார். அவருக்கு சிஎஸ்கே வீரர் மிட்செல் சாண்டனரும் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

சிராஜ் 2 விக்கெட்
இதனால் நியூசிலாந்து வெற்றி அருகே வந்த நிலையில், முகமது சிராஜ் தனது கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வழ்த்தினார். இதனையடுத்து ஆட்டத்தில் மீண்டும் டிவிஸ்ட் ஏற்பட்டது. எனினும் மைக்கேல் பிராஸ்வெல் பவுண்டரி, சிக்சர் விளாச, கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் கைவசம் இருக்க, 20 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவர்
இதனை ஷர்துல் தாக்கூர் வீச, முதல் பந்தை சிக்சர் பிராஸ்வெல் சிக்சருக்கு விளாச, இரண்டாவது பந்து ஓயிடாக மாற, 3வது பந்தில் பிராஸ்வெல் ஆட்டமிழக்க இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராஸ்வல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும்.


Click it and Unblock the Notifications











