Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம ஆட்டம்.. ஷிகருக்கு வார்னே, விவிஎஸ் லட்சுமண் புகழாரம்

மெல்போர்ன்: இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இன்று தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை காலி செய்து ஆடிய ஆட்டம் ரசிகர்களை மட்டுமல்லாமல் வீரர்களயையும் கவர்ந்து வி்ட்டது.

அபாரமான ஆட்டம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷான் வார்னே புகழாரம் சூட்டியுள்ளார்.

146 பந்துகளில் 137 ரன்களைக் குவித்தார் தவான். இதில் 2 சிக்ஸர்களும், 16 பவுண்டரிகளும் அடக்கம். இந்தியாவின் ஸ்கோர் 261 ஆக இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலகக் கோப்பையில் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான். இதற்கு முன்பு 2003 உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங் எடுத்த 134 ரன்களே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அதை முறியடித்துள்ளார் தவான்.

"Great knock", Warne hails Dhawan

ரஹானேவும், தவானும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு இந்தியாவை வலுவான நிலைக்கு உயர்த்தினர். தவானின் ஆட்டம் ஸ்பெஷலானது என்று விவிஎஸ் லட்சுமண் பாராட்டியுள்ளார்.

தவான் 125 ரன்களை எட்டியபோது அது, ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகவும் மாறியது,

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி. இன்றைய போட்டியில் ஷிகர் தவான் பிரமாதப்படுத்தி விட்டார். மேலும், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சையும் இந்தியத் தரப்பு ஒன்றுமில்லாமல் செய்து விட்டது.

Story first published: Sunday, February 22, 2015, 12:49 [IST]
Other articles published on Feb 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+