For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்துல திரும்பவும் பௌலிங் செஞ்சது கிரேட் ஃபீலிங்... பென் ஸ்டோக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி

லண்டன் : மைதானத்தில் புல்வெளிக்கிடையில் மீண்டும் பௌலிங் செய்தது மிகச்சிறந்த பீலிங் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

மைதானத்துல திரும்பவும் பௌலிங் செஞ்சது கிரேட் ஃபீலிங்... பென் ஸ்டோக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி

இங்கிலாந்து வீரர்கள் மைதானங்களில் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வாரத்தில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்களும் மைதானங்களில் பயிற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது பயிற்சி மேற்கொண்ட பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் பயிற்சி ஆரம்பம்

மீண்டும் பயிற்சி ஆரம்பம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏறக்குறைய அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வீரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு, வீரர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி

வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி

வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடர்களில் மோத திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டே கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சிகள் இன்றி வீட்டில் அடைபட்டுள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் பயிற்சி

பென் ஸ்டோக்ஸ் பயிற்சி

கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில் இந்த தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெற்றால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்திய முதல் போர்ட் இங்கிலாந்து என்ற பெயர் கிடைக்கும். முதல் கட்டமாக இந்த வார துவக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் பயிற்சி பெற்றுள்ளார்.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

இந்நிலையில் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் பயிற்சிகளை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ், மீண்டும் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகளை செய்தது சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் பயிற்சி செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 24, 2020, 16:00 [IST]
Other articles published on May 24, 2020
English summary
Great to be bowling again -says Ben Stokes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+