Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பவும் வேலையை துவக்கியிருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு... தலைமை கோச் மகிழ்ச்சி

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் வரும் 27ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன.

முதலில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி இந்திய அணி சிட்னியில் குவாரன்டைனில் உள்ளது.

இந்திய அணியினர் பயிற்சிகளையும் துவக்கியுள்ள நிலையில், மீண்டும் தன்னுடைய வேலையை துவக்கியது சிறப்பானது என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

27ம் தேதி துவக்கம்

27ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டித் தொடர்கள் வரும் 27ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. முதலில் ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் இந்திய அணியினர் சிட்னியில் 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

ரவி சாஸ்திரி மகிழ்ச்சி

ரவி சாஸ்திரி மகிழ்ச்சி

கடந்த சனிக்கிழமை முதல் அவர்கள் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்களுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்பு மீண்டும் வேலைகளை துவக்கியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு அவர் பயிற்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். அதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த வாரத்தில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் சிட்னிக்கு பயணம் மேற்கொண்டனர்.

குவாரன்டைனில் சாஸ்திரி

குவாரன்டைனில் சாஸ்திரி

அவர்களுடன் ரவி சாஸ்திரியும் பயணம் மேற்கொண்டார். ஐபிஎல் போட்டிகள் நிறைவடையும் தருவாயில் யூஏஇக்கு வந்த அவர், இந்திய அணி வீரர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டார். தற்போது அவரும் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளார். இடையில் பயிற்சி ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்.

Story first published: Wednesday, November 18, 2020, 12:53 [IST]
Other articles published on Nov 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+