Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே அணி ஆதிக்கம் ஓடியே போச்சு.. பத்தாண்டுகளில் முற்றாக மாறிய கிரிக்கெட் அணிகள்

டெல்லி: குறிப்பிட்ட காலத்துக்குமுன்புவரை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுடன், எந்த நாட்டு அணி மோதினாலும் ரிசல்ட்டை முன்கூட்டியே ரசிகர்கள் கணித்துவிடுவார்கள். "அட போப்பா எப்படியும் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கப்போகுது. சச்சின் நிக்கிற வரைக்கும் பார்க்கலாம். அப்புறமா டிவிய ஆப் பண்ணிப்போட்டுட்டு வேலை சோலிய பார்ப்போம்" என ரசிகர்கள் புலம்புவது சகஜமாக கேட்கும். ஆனால் கடந்த ஒரு தசாப்தமாக, ஒரே அணி ஆதிக்கம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் மாயமாகியுள்ளது. அனைத்து நாடுகளும் சம பலத்துடன் இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்து கொண்டே உள்ளது. இந்திய அணி உட்பட பெரிய அணிகள், 2004ம் ஆண்டுக்கு கடந்த பத்தாண்டுகளில் விளையாடிய போட்டிகளின் புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது இதை புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா

இந்தியா-ஆஸ்திரேலியா

23 டெஸ்ட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மகிழ்ச்சி என்னவென்றால், ஆஸ்திரேலியா 8 போட்டிகளிலும், இந்தியா 10 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. 5 போட்டிகள் டிரா செய்யப்பட்டுள்ளன. ஒரு நாள் போட்டிகள் 46 விளையாடப்பட்ட நிலையில், அதில் ஆஸ்திரேலியா 21 போட்டிகளிலும், இந்தியா 15 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. 10 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை. இவ்விரு அணிகளுக்கு நடுவேயான டி20 போட்டிகளில், இந்தியா 5லும், ஆஸ்திரேலியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆக மொத்தத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் கை ஓங்கியிருப்பது தெளிவாகிறது.

பாகிஸ்தான்-இலங்கை

பாகிஸ்தான்-இலங்கை

இரு நாடுகளுக்கும் நடுவே நடைபெற்ற 18 டெஸ்ட்களில் பாகிஸ்தான் நான்கிலும், இலங்கை ஐந்திலும் ஜெயம் கண்டது. 9 போட்டிகள் டிராவாகின. ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 20லிலும், இலங்கை 19லிலும் வெற்றி பெற்றன. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. இரு நாடுகள் நடுவேயான டி20 போட்டிகளில் பாகிஸ்தான் ஏழிலும், இலங்கை ஐந்திலும் வெற்றி கண்டுள்ளன. இரு அணிகளும் ஏறத்தாழ சம பலத்துடன் உள்ளன.

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா

இவ்விரு அணிகளும் மோதிக்கொண்டால் ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். 1999ம் ஆண்டு உலக கோப்பை டை போட்டியாக இருக்கட்டும், 434 ரன்களுக்கு மேல் அடித்த ஆஸ்திரேலியாவை விரட்டி பிடித்ததாகட்டும் இவ்விரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை கிடையாது. இத்தகைய இரு அணிகளும் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் ஆஸ்திரேலியா 11லிலும், தெ.ஆப்பிரிக்கா 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. 24 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், தெ.ஆப்பிரிக்காவும் தலா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டி20 போட்டிகளை பொறுத்தளவில் ஆஸ்திரேலியா ஏழிலும், தெ.ஆப்பிரிக்கா 4 போட்டிகளிலும் வென்ற நிலையில் ஒரு போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து

உலக கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எப்படி ரசிகர்களிடம் சூட்டை கிளப்புமோ, அதற்கு ஈடான சூடு, இவ்விரு அணிகள் மோதும்போதும் இருக்கும். இதற்காகவே ஆசஷ் தொடரை உருவாக்கி ஆண்டுதோறும் பழி தீர்த்துக்கொள்கிறார்கள். ஆஸ்திரேலியாவும்-இங்கிலாந்தும் 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நிலையில் ஆஸ்திரேலியா 13லிலும், இங்கிலாந்து 10லிலும் வெற்றி கண்டுள்ளன. 7 போட்டிகள் டிரா ஆகின. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா பெரிய அண்ணணாகவே நீடிக்கிறது. அது 29 போட்டிகளில் வென்ற நிலையில், இங்கிலாந்து 19 போட்டிகளில் மட்டுமே வாகை சூடியுள்ளது. 3போட்டிகளில் முடிவில்லை, ஒரு போட்டி டை ஆனது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தளவில், ஆஸ்திரேலியா ஏழிலும், இங்கிலாந்து 5லும் வெற்ற பெற்ற நிலையில் ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

இந்தியா-இங்கிலாந்து

இந்தியா-இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த புள்ளிவிவரம் முக்கியமானது. டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் 16 முறை பலப்பரிட்சை நடத்தின. அதில், இங்கிலாந்து 7 முறையும், இந்தியா நான்கு முறையும் வாகை சூடின. ஒருநாள் போட்டிகளில் இந்தியா கிங். இங்கிலாந்து, 12 போட்டிகளில் வென்ற நிலையில், இந்தியா இரட்டிப்பாக 24 போட்டிகளை தன்வசப்படுத்தியுள்ளது. 4 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை, 2 போட்டிகள் டை ஆகின.டி20 போட்டிகளில், இங்கிலாந்து நான்கிலும், இந்தியா மூன்றிலும் வெற்றி வாகை சூடியுள்ளன.

இந்தியா-இலங்கை

இந்தியா-இலங்கை

சனத் ஜெயசூர்யாவின் அதிரடியால், இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது இலங்கை. ஸ்ரீநாத் ரிட்டர்ன் ஆனது, அகர்க்கரின் இன்ஸ்விங்கிங், ஜாகீர்கானின் யார்க்கர்களால் திரும்பி எழுந்த இந்தியா, ஜெயசூர்யாவை அடக்கியாண்டு கடைசிவரை அவரை பழைய பார்முக்கு வரவிடாமல் செய்தது. இவ்விரு அணிகளும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் இந்தியா நான்கிலும், இலங்கை மூன்றிலும் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் டிரா. ஒருநாள் போட்டிகளில் இந்தியா 37லிலும், இலங்கை 26லும் வெற்றி பெற்றுள்ளன. 8 போட்டிகளில் ரிசல்ட் இல்லை, 1 போட்டி டை. டி20 போட்டிகளில் இந்தியா, இலங்கை தலா 3 வெற்றிகளை ருசித்துள்ளன. ஆக, இப்போது இந்தியாவின் கைதான் ஓங்கியுள்ளது தெளிவாகிறது.

நியூசிலாந்து-இலங்கை

நியூசிலாந்து-இலங்கை

இலங்கைக்கு நியூசிலாந்து நன்றாகவே போட்டி கொடுத்துவருகிறது என்பதை இந்த புள்ளிவிவரம் தெளிவாக்குகிறது. இரு அணிகளும் 8 டெஸ்ட்களில் மோதி அதில் 4ல் இலங்கையும், மூன்றில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா. ஒருநாள் போட்டிகளில் இலங்கை 14லிலும், நியூசிலாந்து 9லும் வெற்றிக் கனியை தட்டிப்பறித்துள்ளனர். 5 போட்டிகளில் முடிவில்லை. டி20களில் நியூசிலாந்து 5லும், இலங்கை 6லும் வெற்றியை ருசித்துள்ளன. 1 போட்டி, டை, ஒரு போட்டியில் முடிவில்லை.

Story first published: Saturday, June 21, 2014, 11:19 [IST]
Other articles published on Jun 21, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+