For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்கும்… பிரபல ஜோதிடரின் தீர்க்க முடிவு… ரசிகர்கள் அதிர்ச்சி

லண்டன்:உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் தோல்வி அடையும் என்று பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மே 30 முதல் ஜூலை 14 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரவுன்ட் ராபின் அடிப்படையில் நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்குள் நுழையும்.

அஸ்வின் செய்ததில் எந்த தவறும் இல்லை! பாயின்ட்.. பாயின்ட்டாக விளக்கம் அளித்த அஸ்வின் செய்ததில் எந்த தவறும் இல்லை! பாயின்ட்.. பாயின்ட்டாக விளக்கம் அளித்த "பெஸ்ட்" அம்பயர்!

லீக் ஆட்டங்கள்

லீக் ஆட்டங்கள்

இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30ம் தேதி தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்தியா, பாக். மோதல்

இந்தியா, பாக். மோதல்

அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப் பட்டு இருக்கிறது. பரம வைரிகள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

ஜோதிடரின் கணிப்பு

ஜோதிடரின் கணிப்பு

இந் போட்டியில் பாகிஸ்தானே வெற்றி பெறும் பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது: கோலியின் பிறந்த வருடம் 1988 அல்லது 1987 ஆக இருந்தால் இந்தியாவுக்கு தான் வெற்றி.

கோலி பிறந்த வருடம்

கோலி பிறந்த வருடம்

ஆனால், அவரது உண்மையான பிறந்த வருடம் 1989. அதனால் அவரது பால்ய கால பயிற்சியாளரை தொடர்பு கொண்டு அவரது உண்மையான பிறந்த வருடத்தை கேட்டேன்.

வேண்டியது நடக்கவில்லை

வேண்டியது நடக்கவில்லை

1987 அல்லது 88 ஆக இருக்க வேண்டும் என்று வேண்டினேன். ஆனால் அது அப்படி நடக்க வில்லை. 1989 என்று அவர் தீர்க்கமாக கூறினார்.

இந்தியா வெல்லாது

இந்தியா வெல்லாது

எனவே, இந்த முறை இந்திய அணி உலக கோப்பையை வெல்லாது. அதே போல, இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானே வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 27, 2019, 21:46 [IST]
Other articles published on Apr 27, 2019
English summary
Greenstone lobo predicts the winner of the india, pakistan clash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X